புதிதாக தயாராகும் 'ஏர்போர்ஸ் ஒன்' விமானங்கள்
அமெரிக்க அதிபரின் தனிப்பட்ட பயணங்களுக்காக பயன்படுத்தப்படும், 'ஏர்போர்ஸ் ஒன்' போயிங் 747 விமானத்திற்கு, 26 வயதாகி விட்டதால், அதை மாற்ற, அமெரிக்க ராணுவம் முடிவு செய்துள்ளது. இதற்காக, போயிங் விமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இரண்டு ஏர்போர்ஸ் ஒன் விமானங்கள் தயாரிப்பு பணியை துவக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய விமானம், 2022ல், அப்போதைய அதிபரின் பயன்பாட்டுக்கு வரும் இதற்கான செலவு தொகை எவ்வளவு என்பதை, அமெரிக்க ராணுவ தலைமையகமான, 'பென்டகன்'
ரகசியமாக வைத்துள்ளது. எனினும், 20 ஆயிரம் கோடி ரூபாயில், அதிநவீன
வசதிகளுடன் அந்த விமானம் தயாரிக்கப்பட உள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.
பறக்கும் வெள்ளை மாளிகை
* அதிநவீன, பறக்கும் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கொண்டது. தேவைப்பட்டால், எந்த நாட்டின் மீது பறக்கிறதோ அந்த நாட்டின் ரேடாரை செயலிழக்க செய்ய இதில்
வசதிகள் உண்டு. எதிரே வரும் விமானத்தை தாக்க, ஏவுகணைகளும் உள்ளன
* கம்ப்யூட்டர், 85 இணைப்புகளுடன் போன், பேக்ஸ், 19, 'டிவி'கள், வானிலிருந்த படி, தரையில்
உள்ள நாடுகளுடன் போனில் பேசும் வசதி
* ஒரே நேரத்தில், நுாறு பேர் சாப்பிட வசதி; 2,000 பேர் சாப்பிட தேவையான உணவு, மளிகை பொருட்கள் இருப்பு வைக்கும் வசதி
* வானிலேயே எரிபொருள் நிரப்பும் வசதி உள்ளதால், எவ்வளவு நாள் வேண்டுமானாலும் வானிலேயே தொடர்ந்து பறக்க முடியும்.
Post a Comment