யோசித கைதுசெய்யப்பட்டதை அடுத்து, மந்தநிலை ஏற்பட்டாலும் விசாரணை தொடருகிறது - கப்டன் அக்ரம் அலவி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது புதலவர் லெப்.யோஷித ராஜபக்ஸவுக்கு எதிராக, இலங்கை கடற்படையின் விசாரணைக்குழுவினால் நடத்தப்பட்டு வந்த விசாரணைகள் அனைத்தும் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியிருந்த செய்திகளை இலங்கை கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
மேலும் தமது தரப்பிலான விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படுவதாகவும் தெரிவித்தார்.
யோஷித ராஜபக்ஸ நிதிமோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதையடுத்தே இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வந்த யோஷிதவுக்கு எதிரான விசாரணைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பாக கடற்படைப் பேச்சாளரிடம் வினவியபோது,
"யோஷித கைதுசெய்யப்பட்டதை அடுத்து ஒரு விதமான மந்த நிலை ஏற்பட்ட போதிலும் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. அது நிறுத்தப்படவில்லை" என்று குறிப்பிட்டார்.
லெப்.யோசித ராஜபக்ஸவின், கல்வித் தகைமைகள் மற்றும் இலங்கை கடற்படைத் தளபதியின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளாமல் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பாக இலங்கை கடற்படையினால் விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
யோஷித ராஜபக்ஸ 70 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளமை முக்கியமானதொரு விவகாரம். அவற்றில் 20 பயணங்களுக்கு மாத்திரமே இலங்கை கடற்படையின் அனுமதி பெறப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் ஜனாதிபதி செயலகத்துடன் இணைக்கப்பட்டிருந்த காலப்பகுதியி்லேயே இந்தப் பயணங்களை மேற்கொண்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
Yahapalanya is a Joker's Paradise...............
ReplyDelete