Header Ads



சவூதி அரேபியாவிலிருந்து தமது, நாடுகளுக்கு திரும்புவோரின் கவனத்திற்கு..!

சவூதி அரேபியாவிலிருந்து ஊருக்கு செல்லும்போது மக்கள் விமான நிலையங்களுக்கு குறைந்தது 4 மணிநேரத்திற்கு முன் செல்வது நல்லது.

காரணம் இப்போது போகும்போதும் நீங்கள் உங்கள் விரல் அடையாளம் Finger Print கொடுக்க வேண்டியுள்ளது.

உங்களுக்கு எந்த குற்ற பின்னணியும் உள்ளதா அல்லது பேங்க் வரவு செலவு பாக்கி கார் வாங்கி பெயர் மாற்றாமல் இருந்தாலோ உங்கள் பெயரில் கார் வாங்கி அது வேறு ஒருவர் பெயருக்கு மாற்றாமல் இருந்தாலோ நீங்கள் எக்சிட் செல்ல முடியாது இவை அனைத்தும் சரி செய்த பிறகே நீங்கள் செல்ல முடியும்.

குறைந்தது 2 மணிநேரத்திற்கு முன்னதாக போர்டிங், எமிக்ரேஷன் போன்ற கவுண்டர்களின் சேவை நிறுத்தப்படுகிறது.

சவூதி அரேபியா போன்ற விமானங்களில் செல்பவர்களுக்கு 46 கிலோ லக்கேஜ் கொண்டு செல்லலாம், அந்த 46 கிலோவை ஒரே பெட்டியாக கட்டினால் நீங்கள் திருப்பி அனுப்பப்படுவீர்கள்.

இல்லை என்றால் 23 கிலோவை மட்டும் கணக்கில் ஏற்றி கொண்டு மீதி உள்ள 23 கிலோவிற்கு பணம் கட்ட சொல்வார்கள். ஒரு கிலோவிற்கு 220 ரியால் அப்படி இல்லை என்றால் நீங்கள் பிரித்து கட்ட வேண்டும், நீங்கள் பிரித்து கட்ட அட்டை பெட்டி டேப் தேடி கண்டு பிடித்து கட்டுவதற்குள் இமிக்ரேசன் டைம் முடிந்து விடும் க்யு வில் 30 பேர் நின்றால் கூட ஒரு மணி நேரம் ஆகிவிடும்.

46 கிலோவை பிரித்து 23 கிலோ 23 கிலோ என தனி தனியாக கட்ட வேண்டும்.

எந்த நிறுவனத்தின் ஃபிளைட்டுக்கு டிக்கெட் எடுத்தாலும் டிக்கெட் எடுக்கும் டிராவல்ஸில் உங்கள் பேக்கேஜ் எத்தனை கிலோ அணுமதி என்பதை சரியாக ஒவ்வொரு முறையும் கேட்டு தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள்.

காரணம் திடீரென ஜெட் விமானம் 5 நாட்களுக்கு மட்டும் 30 Kg + 7kg என்று கழிந்த இரண்டு மாதங்களில் 3 முறை மாற்றியது.

அன்றைய நாட்களில் நமது பல சகோதரர்கள் விஷயம் தெரியாமல் 40+ மற்றும் கையில் 7+ கொண்டுபோய் திருப்பி கொண்டு வர ஆள் இல்லாமல் தவிக்க வேண்டாம்.

தகவல் உதவி : குறிஞ்சி சுலைமான்

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Good Peace of Advice.

    May Allah Bless you for your helping mind.

    ReplyDelete
  3. Realy very good information dr brother, jezakumullahu haira for shearing this message

    ReplyDelete

Powered by Blogger.