மைத்திரி, ரணில், சம்பந்தன் ஆகியோருடன் ஹுஸைன் சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயத் ரா அத் அல் ஹூசைனிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்ட பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது தற்போதைய அரசியல் நிலைமைகள், புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சமயத்தில் அமைச்சர் ஹக்கீம் அவர்களை துருக்கி அனுப்பியது ஏதோ சதி இருப்பதாக தோன்றுகின்றது.
ReplyDeleteஇந்த சமயத்தில் அமைச்சர் ஹக்கீம் அவர்களை துருக்கி அனுப்பியது ஏதோ சதியாக இருக்குமோ என்று தோன்றுகின்றது.
ReplyDelete