Header Ads



அநுராதபுர முஸ்லிம்கள்,சிந்திக்க தொடங்கிவிட்டார்கள் - அமீர் அலி

(அபூ செய்னப்)              

அநுராதபுரத்தில் முஸ்லிம்கள் கல்வி பற்றி சிந்திக்க தொடங்கிவிட்டார்கள். கல்வி ஒன்றினால் மட்டுமே எதிர்காலத்தில் எமது சமூகம் நவீன சவால்களுக்கு முகம் கொடுத்து வெற்றி பெறமுடியும் என்ற  இந்த யதார்த்தத்தை இப்போது எல்லாப் பிரதேசங்களிலும் உணரப்பட்டிருக்கிறது என்பதனை இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சுட்டி நிற்கிறது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கூறினார். கெகிராவையில் அமைந்துள்ள ராபா தனியார் கல்வி நிறுவனத்தின் ஆங்கில டிப்ளோமா பாடநெரியை பூர்த்தி செய்த 33 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் அன்மையில் கெகிராவ அரலிய ஹோட்டலில் கல்வி நிறுவனத்தின் நிறுவனர் ரா.பா.அரூஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரைநிகழ்த்தும் போதே பிரதி அமைச்சர் அமீர் அலி மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்தும் போது

எதிர்காலம் மிகவும் கடுமையானதாக இருக்கும், நமது சமூகம் கல்வித்துறையில் ஆர்வம் காட்டவேண்டும் இன்றைய நாட்களில் பெண் மாணவிகளே அதிகம் கற்கும் போக்கு காணப்படுகின்றது, இந்த நிலை தொடருமானால் அரச மற்றும் தனியார் துறைகள் தோறும் பெண்களே தொழில் புரிய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்,மாணவர்களின் கல்வி விடயத்திலும்,ஒழுக்க விடயத்திலும் பள்ளிவாசலும்,பாடசாலையும் இணைந்து செயற்பட வேண்டும், பள்ளிவாசல் மிம்பர்கள் நமக்கு கிடைத்துள்ள மிகச்சிறந்த ஊடகமாகும் அந்த ஊடகத்தை நமது சமூகத்தினை நல்வழிப்படுத்துமுகமாக பயன்படுத்த வேண்டும். இளைஞ்ஞர்களுக்கு நல்லுபதேசம் செய்து அவர்களுக்கு தொழில் வழி காட்டல்களை அடையாளப்படுத்த வேண்டும். 

எந்த அபிவிருத்திப் பணிக்கும் அரசியல் இன்றியமையாததாகும் இந்த மாவட்டத்திற்கு முஸ்லிம்களுக்கு வரலாற்றில் முதல்தடவையாக ஒரு தலைமைத்துவத்தை நாம் பெற்றுக் கொடுத்துள்ளோம் உங்கள் கல்விப்பிரச்சினை,காணிப்பிரச்சினை இன்னும் மத் ரீதியான பிரச்சினைகளுக்கு இந்த அரசியல் தலைமை முன் நின்று உழைக்க வேண்டும். அதனை நீங்கள் தான் செய்விக்க வேண்டும். ஒரு அரசியல் வாதியை வழி நடத்தும் சக்தி வாக்காளர்களிடமே உள்ளது,அதனை பயன்படுத்துவதில் அந்த அரசியல் வாதியை வழிநடத்துவதில் நீங்கள் கரிசனை அற்று இருந்துவிட்டு பின்னர் அவர்பற்றி குறைகூறித்திரிவது ஒரு நல்ல பழக்கமானதாக கொள்ள முடியாது, இன்று இங்கே சான்றிதழ் பெரும் இந்த மாணவர்கள் இத்தோடு எல்லாம் முடிந்துவிட்டது என்று சும்மா இருந்துவிடக்கூடாது இன்னும், தொடர்ந்து கற்க வேண்டும். ஆங்கிலக்கல்வியானது மிகவும் அத்தியவசியமானதாகும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உயர் தொழில் வாய்ப்புகளை பெற மேலதிக தகமையாக ஆங்கிலக்கல்வி கொள்ளப்படுகிறது,

அநுராதபுரம் வறுமையின் பிடியில் இருக்கின்ற ஒரு மாவட்டமாகும். வறுமையுடன் முயற்சி செய்து கற்கின்ற கல்வியானது இந்த சமூகத்திற்கு பயன் பெரும் வகையில் அமைய வேண்டும். அத்தோடு பெற்றோர்கள் பிள்ளைகளை நம்ப வேண்டும்,அந்த நம்மிக்கையை கப்பாற்றி பெற்றோரின் சிரமங்களையும் கஸ்டங்களையும உணர்ந்து செயலாற்றும் பிள்ளைகளின் எதிர்காலமே சிறந்ததாக அமையும் என அவர் மேலும தெரிவித்தார்.

நிகழ்வின் இறுதிக்கட்டத்தில் அநுராதபுர மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் அமைச்சரின் ஊடக இணைப்பாளர் நாச்சியாதீவு பர்வீன், பாதுகாப்பு அமைச்சின் வெடிபொருள் கட்டுப்பாட்டாளர் எம்.எஸ்.எம்.இக்ரிமா, கணக்காளர் முஹம்மது காசிம்,சமர்தீன் ஆசிரியர் இன்னும் பலர் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.