Header Ads



ஜனாதிபதி மைத்திரி தனது நிறைவேற்று, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார்

ஷிராந்தி மற்றும் நாமலை கைதுசெய்வதைத் தடுக்கவே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை கைவிட்டதாக, எஸ்.பி. கூறுவாறாயின், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அப்போது தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளார் என, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மனபில தெரிவித்துள்ளார். 

தன்னிடம் இருந்த கட்சித் தலைமைப் பொறுப்பை "தா" என்று தற்போதைய ஜனாதிபதி கோரியதாக, மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் நீர்கொழும்பில் வைத்து குறிப்பிட்டார். 

இதற்கு பதிலளிக்கும் வகையில் எஸ்.பி.திஸாநாயக்க நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதியிடம் இருந்து பதவியைப் பறிக்கவில்லை" என குறிப்பிட்டார். 

முன்னாள் ஜனாதிபதி அவரது மனைவி மற்றும் மகனைக் கைதுசெய்வதைத் தடுக்கவே கட்சியின் தலைமைப் பதவியை கொடுக்க தீர்மானித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

இதன்படி, தௌிவாவது மைத்திரிபால சிறிசேன தனது நிறைவேற்று அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளதாகவே என, இன்று -16- இடம்பெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பில் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.