தென்கொரியா சென்ற இலங்கை எம்.பி.களுக்கு ஏற்பட்ட பரிதாபம்
தென்கொரிய ஷோலில் நடைபெற்ற சமாதான மாநாடு ஒன்றுக்காக சென்ற இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆரம்ப நிகழ்வில் பங்கேற்க முடியாதநிலை ஏற்பட்டது.
பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமது கடவுச்சீட்டை ஷோல் விமானநிலையத்தின் கழிப்பறைக்குள் மறந்து வைத்து விட்டு சென்ற நிலையில் அவரை நாட்டுக்குள் அனுமதிக்க அந்த நாட்டு அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
இதனால் இலங்கையில் இருந்து சென்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆரம்பநிகழ்வில் பங்கேற்கமுடியாமல் போனது.
சர்வதேச சமாதான சம்மேளனம் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது.
இந்தநிலையில் கழிப்பறைக்குள் மறந்துவிட்ட சென்ற மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் கடவுச்சீட்டை, பணியாட்கள் கண்டெடுத்து ஒப்படைத்தனர்.
அனோமா கமகே, காமினி லொக்கே, துசித விஜயமானே, சாந்தி ஸ்ரீ ஸ்கந்தராசா, ரோஹினி விஜயரட்ன, சிசிர ஜெயக்கொடி, சானக, ஹேசா விதானகே, ஜானக வக்ககும்புர, சியான் சேமசிங்க, தெனுக விதானகமகே, கே.கே மஸ்தான், கவிந்த ஜெயவர்த்தன, பந்துவ பத்ரிகொட, விஜயபால ஹெட்டியாராச்சி மற்றும் எல் ஏ விஜயமான்ன ஆகியோர் இந்த மாநாட்டுக்கு சென்றிருந்தனர்.
டோய்லட் டிசு பேப்பர் என்று நினைத்து அங்கேயே விட்டு வந்தார்களோ? மக்களின் வரிப்பணத்தில் ஓசியாக சுற்றித்திரியும் இவர்களுக்கு எங்கே அருமை புரியப்போகிறது.
ReplyDeleteதொலைந்தாலும் பரவாஇல்லை இன்னொரு டுப்ளிகேட் ஒரிஜினல் ரெடியாக வைத்திருப்பார்கள்.
There is no female MP for Matale
ReplyDeletethay have english knowlage or korean
ReplyDelete