Header Ads



யோசிதவை பார்வையிடச் செல்லும் பலர், சிறையில் கிடக்க வேண்டியவர்கள் - அனுரகுமார

சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப மூலதனம் எங்கிருந்தது கிடைத்தது என்பதனை மஹிந்த ராஜபக்ஸ குடும்பம் அம்பலப்படுத்த வேண்டுமென ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கோரியுள்ளார்.

கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க் என்னும் சீ.எஸ்.என் நிறுவனத்தின் ஆரம்ப மூலதனமாக 234 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யோசித ராஜபக்ஸ கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை அரசியல் ரீதியான காரணங்களின் பின்னணியில் மறைக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யோசித ராஜபக்ஸவே, சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் பிரதம நிர்வாகி என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யோசிதவை பார்வையிடச் செல்லும் பலர் சிறையில் அடைபட்டுக் கிடைக்க வேண்டியவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.