Header Ads



சிங்கப்பூர் வைத்தியசாலையில், குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய ராஜித்த


சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாகவும், அங்கு வைத்து அவரின் மகனின் பிறந்தநாளை கொண்டாடியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றுமுன்தினம் -19- மாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து ராஜித சேனாரத்னவுக்கு, கொழும்பு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளை அடுத்து, மேலதிக சிகிச்சைகளுக்காக நேற்றுக்காலை சிங்கப்பூருக்கு சிறப்பு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.

சிங்கப்பூரின் பிரபலமான மலவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு,சிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து. ராஜித சேனாரத்னவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், நிலைமைகள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை அரசுக்கு எதிராக இயங்கும் ஊடகங்கள், தேங்காய் உடைத்தது வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.

இன்னுமொரு ரொட்டி கருக போகின்றது என பிரச்சாரம் செய்து வந்தது.

அவர்களுக்கு பதிலாக தாம் நலமாக இருப்பதாக ராஜித்த சேனாரத்ன தம் முகநூளில் குறிப்பிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.