Header Ads



சவூதி அரேபியாவில் "ஜனக அப்துல்லாஹ்" அகால மரணம் (படங்கள்)


-Riyas Nafee-

அஸ்ஸலாமு அலைக்கும் 

சுமார் 8 வருடங்களுக்கு முன்பு ஜோர்தான் நாட்டில் வைத்து புனித இஸ்லாத்தைத் தழுவியவர். இலங்கையிலுள்ள தனது குடும்பத்தின் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் தனது அன்புத் தாயையும் தங்கையையும் இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கச் செய்தவர். 

புனித இஸ்லாத்தைத் தழுவிய இவர், அந்த தூய மார்கத்தை தனது குடும்பத்திற்கும்,அன்பர்களுக்கும்,நண்பர்களுக்கும் எத்தி வைப்பதில் அயராது உழைத்தவர். சவுதி அரேபியாவின் புரைதா நகரிலுள்ள "சப்ரா" ஜாலியாத் எனும் இஸ்லாமிய வழிகாட்டி மையத்தில் தன்னை ஒரு இஸ்லாமிய அழைப்பலனாக ஈடுபடுத்திக் கொண்ட இவர், எப்பொழுதும் இஸ்லாத்தை மாற்று மத நண்பர்களுக்கு எடுத்துரைப்பதில் முழு நேர ஈடு பாடு கொண்டவர்.

'அனைத்து ஆத்மாக்களும் மரணத்தை அடைந்தே தீரும்" என்ற அல்லாஹ்வின் 

நியதி நேற்றைய தினம் 09.02.2016 எமது அன்பு சகோதரர் ஜனக அப்துல்லாஹ் அவர்களை சூழ்ந்து கொண்டது. 

அல் கசீம் - அயூன் அல் ஜாவா எனும் பகுதியில் நேற்று (09/02/2016) நடந்த ஒரு விபத்தில் நம் சகோதரர் எம்மை விட்டு பிரிந்து சென்று மறுமை வாழ்வைத் துவங்கவுள்ளார்.

அவரின் பிரிவு புரைதா வாழ் தமிழ் பேசும் உள்ளங்களில் ஆழ்ந்த கவலையை உண்டாகியுள்ளது.

தனது ஒன்றரை வயது மகளை பிரிந்து சென்ற அவரின் மனைவி ஐந்து மாதக் கர்ப்பிணி என்பது கூடுதல் கவலையை ஏற்படுத்துகின்றது. 

இங்குள்ள அனைவரினதும் மனங்களை வென்ற அவரின் மறுமை ஈடேற்றத்துக்காக துஆ செய்யும் எங்களுடன் நீங்களும் இணைந்து கொள்ளும் படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்விபத்தில் சகோதரர் ஜனக அப்துல்லாஹ் அவர்களின் தாயும், தனது தொழில் தருன்றி (KAFEEL) ன் மகளும் இறையடி சேர்ந்தனர். 

அவரது நல்லடக்கம் பற்றிய விபரங்கள் கூடிய சீக்கிரம் தெரிவிப்போம்.
உங்களின் உயரிய துஆக்களில் இவர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

9 comments:

  1. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் . யா அல்லாஹ் இவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தௌசை நசீபாக்குவாயாக.

    ReplyDelete
  2. innaalillahi wainna ilaihi rajuhoon

    ReplyDelete
  3. Innalillahi wainna ilaihi rajoon....Allahumma'fir lahum warhamhum...

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. யா அல்லாஹ் எனது சகோதரனின் கபூர் குழியை விசாலமாக்கிடு அதே நேரத்தில் அவருடைய கபூர் குழியை பூஞ்சோலை ஆக்கிடு ஆமின் .

    ReplyDelete
  6. Inmalillah
    ....... Ya Allah jannathul perdous naseebakkuwayahaa..
    .ameen

    ReplyDelete
  7. jaffna muslim. please oru marana news sollum pothu kawizai nadai illamal olunkaha sollunkal.
    sorry.
    innalillahi wainna iliki rajioon.

    ReplyDelete
  8. யா அல்லாஹ் எனது சகாே தரரின் கபூரை
    விசாலப் படுத்தி பூஞ் சாே லையாக்குவாயாக.அவருக்கு ஜன்னத்துல் பிர்தெ ளஷ் சுவனத்தை காெ டுப்பாயாக. அவருடைய குடும்பத்திற்கு சாந்தியையும்
    சமாதானத்தையும் காெ டுப்பாயாக..ஆமின்

    ReplyDelete

Powered by Blogger.