இலங்கையர் தயாரித்த ரொக்கெட் - உதவி வழங்குமாறு மைத்திரி உத்தரவு
ரொக்கட் தொழிற்நுட்பம் தொடர்பாக சிறந்த திறமைகளை வெளிக்காட்டி வரும் குருணாகல் மாவத்தகம பிரதேசத்தை சேர்ந்த திவங்க நெரஞ்சன் திஸாநாயக்க என்ற இளைஞர் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் இணைப்பு பணிப்பாளர் மருத்துவர் சமந்த திக்கலவ ஆராச்சி, திவங்கவின் வீட்டுக்கு சென்று அவரது திறமைகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.
மொரட்டுவை ஜேர்மன் தொழிற்நுட்ப பயிற்சி நிலையத்தில் பயின்று வரும் திவங்க, ஏற்கனவே சில ரொக்கட்டுகளை தயாரித்து பரீட்சித்து பார்த்துள்ளார்.
இவரது புதிய ரொக்கட்டை விண்ணில் செலுத்த முழுமையான உதவிகளையும் தேவையான ஆலோசனைகளையும் வழங்க இலங்கை விமானப்படையின் தொழிற்நுட்ப மற்றும் பொறியியல் பிரிவு உறுதியளித்துள்ளதாக திவங்க குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment