இலங்கை பெண் உயிரிழப்பு
லெபனான் நாட்டிற்கு பணிப் பெண்ணாக சென்ற பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
லெபனானில் பணியாற்றி வந்த தங்கொட்டுவை பகுதியைச் சேர்ந்த 63 வயதான எசிலின் காலோ என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இதேவேளை இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளது.
கடந்த 20ஆம் திகதி திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அங்கு பணிக்காக சென்ற இப் பெண் சுமார் 8 வருடங்களாக இலங்கைக்கு வருகைத் தரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment