மகிந்த ராஜபக்ஸ விலகிச்செல்ல முடியும் - துமிந்த
ஸ்ரீலங்கா சுத்நதிரக் கட்சியில் இருப்பதா அல்லது விலகிச் செல்வதா என்பதனை குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ரஜபக்ச தீர்மானிக்கப்பட்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில,
கட்சியை விட்டு விலகி வெளியேறுவதா அல்லது கட்சியில் தொடர்ந்தம் நீடிப்பதா என்பதனை தீர்மானிக்கும் முழு உரிமை மஹிந்தவிற்கு உண்டு.
தெரிந்து கொண்டே கட்சியின் ஒழுக்க விதிகளையும் யாப்பு விதிகளையும் மீறுவது பாரதூரமான குற்றமாகும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்கவிதிகள் மற்றும் யாப்பு விதிகள் பற்றி முன்னாள் தலைவர் என்ற வகையில் மஹிந்தவிற்கு பூரண தெளிவுண்டு.
எனினும் மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்ட புதிய ஒருவரைப் போன்று செயற்படுகின்றார்.
இதனால் பண்டாரநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்ட பல ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எந்தவொருவரையும் பலவந்தமான அடிப்படையில் கட்சியில் வைத்துக் கொள்ள எமக்கு அவசியமில்லை.
ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள் எந்தவொரு நேரத்திலும் கட்சியை விட்டு விலகிச் செல்ல முடியும். கட்சியின் கதவுகள் திறந்தே உள்ளன.
கட்சியை உடைக்க அங்காங்கே சூழ்ச்சி செய்யும் கூட்டங்களை நடத்தும் ஊடகங்களில் வீரர்களைப் போன்று பேசும் நபர்களுக்கு எதிராக கட்சியை நேசிக்கும் மக்கள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment