சிரியாவில் போர் நிறுத்தம்..?
சிரியாவில் பாதியளவு போர் நிறுத்தத்தை கொண்டுவரக்கூடிய ஒரு உடன்பாட்டை அமெரிக்காவும் ரஷ்யாவும் அறிவித்துள்ளதை சிரியாவுக்கான ஐநா தூதுவர் வரவேற்றிருக்கிறார்.
ஆனால், அந்த ஒப்பந்தத்தை களத்தில் அமல்படுத்துவது ஒரு பெரும் சவாலாக இருக்கும் என்றும் தூதுவர் ஸ்டாஃபன் டெ மிஸ்துரா கூறியுள்ளார்.
இதற்கு சாதகமான பதிலை சிரியாவின் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி குழுக்களிடம் இருந்து பெறுவதே அடுத்த முக்கிய விசயம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரவுள்ள இந்த மோதல் நிறுத்தத்தை அந்த இரு தரப்பும் அதற்கு முன்னதாக ஏற்றாக வேண்டும்.
ஆனால், இந்த போர் நிறுத்த திட்டம், இரண்டு ஜிகாதி குழுக்களான இஸ்லாமிய அரசு மற்றும் நுஸ்ரா முன்னணி ஆகியவற்றுக்கு பொருந்தாது.
Post a Comment