Header Ads



மகிந்தவுக்கு எதிரான, விசாரணைகள் தொடரும் . மைத்திரி உறுதிபட தெரிவிப்பு

தமது குடும்பத்தினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் குற்ற விசாரணைகளை மூடிமறைத்து கொள்ளும் நோக்கிலேயே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை இரண்டாக உடைத்து புதிய கட்சியை ஆரம்பிக்க போவதாக கூறி வருகிறார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவுபட்டாலும் விசாரணைகளை நிறுத்த தான் இணங்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக நடத்தப்படும் பொலிஸ் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற செயற்பாடுகளை நிறுத்தினால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து கூட ஓய்வுபெற தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதியிடம் கூறிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ச ஆட்சியில் குற்றம் செய்தவர்களை சட்டத்திற்கு முன் கொண்டு வருவதாக கூறி ஆட்சிக்கு வந்த தான், அந்த செயற்பாடுகளுக்கு தடையேற்படுத்துவதை விட ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவது பொருத்தமானது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டுக்கு அமைய கடந்த 17 ஆம் திகதி கொழும்பில் கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பிரதிநிதிகள், கட்சி இரண்டாக பிளவுபட்டாலும் ஜனாதிபதியின் கொள்கையை ஆதரவு வழங்குவது என தீர்மானித்துள்ளனர்.

அத்துடன் மகிந்த ராஜபக்சவின் இந்த செயற்பாடுகள் காரணமாக இறுதியில் உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகளுக்கு போவதற்கு இடமில்லாது போய்விடும் எனவும் சிரேஷ்ட உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த காலங்களில் கிராம மட்டத்தில் நடந்த ஊழல், மோசடிகளில் தொடர்புடையவர்கள் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கி வரும் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் குழுவில் முன்னிலையில் இருப்பதாகவும் அவர்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படும் தலைவிதியானது மிகவும் அனர்த்தமானதாக இருக்கும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

2 comments:

  1. Mahinda's BLACKMAIL group must be exposed and defeated
    with full force !

    ReplyDelete
  2. Well.. Well, if it is truth!

    ReplyDelete

Powered by Blogger.