Header Ads



இலங்கை முன்னேற்றம்

ஊழல் தடுப்பு தொடர்பான சர்வதேச அட்டவணையில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளமை குறித்து புதிய அட்டவணை மூலம் தெரிய வந்துள்ளது.

ட்ரான்பேரன்சி இன்டர்நெசனல் எனப்படும் சர்வதேச அமைப்பு வருடாந்தம் ஊழல் நடவடிக்கைகள் தொடர்பான சர்வதேச நாடுகளின் பட்டியல் ஒன்றை வெளியிட்டு வருகின்றது.

இதன் பிரகாரம் பூச்சியம் புள்ளிகளைப் பெறும் நாடுகள் ஊழலற்ற நாடுகளாகவும், 100 புள்ளிகளைப் பெறும் நாடுகள் ஊழல் தலைவிரித்தாடும் நாடுகளாகவும் பட்டியலிடப்படுகின்றன.

இந்த ஆண்டின் பட்டியலில்' இலங்கை 37 புள்ளிகளைப் பெற்று 83வது .இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 85ம்இடத்தில் இருந்த இலங்கை ஊழல் தடுப்பு நடவடிக்கையில் முன்னேற்றம் கண்டுள்ளமை இந்த ஆண்டின் பட்டியல் மூலம் தெளிவாகியுள்ளது.

பெனின் இராச்சியம், சீனா, லைபீரியா, கொலம்பியா ஆகிய நாடுகள் இந்த ஆண்டின் அட்டவணையில் இலங்கையுடன் சம நிலையில் காணப்படுகின்றன.

உலகின் மிகக்குறைந்த ஊழல் நாடாக டென்மார்க் பட்டியலிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.