அதிவேக இண்டர்நெட் சேவை பலூன், இலங்கையில் ஆரம்பம்
-மீயல்லை ஹரீஸ்-
"Project Loon" என அழைக்கப்படும் அதிவேக இண்டர்நெட் சேவை வழங்கும் கூகிள் பலூன் அதன் முதல் சோதனையை ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி இன்று திங்கள் இலங்கையில் ஆரம்பித்துள்ளது .
இப் பரிசோதனையில் பயன்படுத்தப்பட இருக்கும் மூன்று பலூன்களில் ஒன்று இலங்கையின் தெற்குப் பகுதியினூடாக இன்று காலை இலங்கை வான்வெளியில் பிரவேசித்தது . இது அமெரிக்காவின் தென் பகுதியில் இருந்து அனுப்பப்பட்டு ள்ளது.
நாடெங்கிலும் மலிவான விலையில் இன்டர்நெட் சேவையின் விஸ்தரிப்பு இதனூடாக எதிர்பார்க்கபடுகிறது
விமானங்கள் பறப்பதை விட இரண்டு மடங்கு உயரமான வெற்றுக்கண்ணுக்கு புலப்படாத ஆகாயத்திலேயே இந்த பலூன்கள் நிலை கொண்டிருக்கும் . மறுசுழற்சி செய்ய முடியுமான இந்த பலூன்கள் 180 நாட்கள் வாழ்தகவுடையன .
20 மில்லியன் சனத்தொகையை உடைய இலங்கையில் 3.3 மில்லியன் நடமாடும் இன்டர்நெட் தொடர்புகளும், 630,000 நிலையான சந்தா தொடர்புகளும் உள்ளன !
1989 ஆம் ஆண்டு கையடக்க தொலை பேசியை தெற்காசியாவிலேயே முதலில் அறிமுகப்படுத்திய நாடு இலங்கையாகும் .அதே போல் 2004 ஆம் ஆண்டு 3G தொழிநுட்பத்தையும் 2014 ஆம் ஆண்டு 4G தொழிநுட்பத்தையும் இப் பிராந்தியத்தில் முதலாவதாக இலங்கை அறிமுகப்படுத்தியது .
Post a Comment