மஹிந்த அனுப்பிய, தகவல்கள் நிராகரிப்பு - இணக்கப்பாட்டுக்கும் தயாரில்லை - மைத்திரி அதிரடி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் குடும்பத்துடன் எவ்வித இணக்கப்பாட்டையும் ஏற்படுத்திக்கொள்ள தயாரில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.ராஜபக்ஸ குடும்பத்திற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுக்களிலிருந்து அவர்களை விடுவித்தால் அதற்கு ஈடாக அரசியலிலருந்து ஓய்வு பெறுவதற்கோ அல்லது வேறும் எந்தவொரு விட்டுக்கொடுப்யேயோ மேற்கொள்ளத் தயார் என மஹிந்த தரப்பு, மைத்திரிக்கு தகவல் அனுப்பி வைத்துள்ளது.
கடந்த சில தினங்களாகவே இவ்வாறு தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் ஜனாதிபதி மைத்திரி நிராகரித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மஹிந்த இரண்டாக பிளவடையச் செய்தாலும், ராஜபக்ஸக்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்து தண்டனை விதிக்கச் செய்ய நீதிமன்றமும் காவல்துறையினரும் செயற்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ தனது குடும்ப உறுப்பினர்களை காப்பாற்றும் முயற்சியில் மட்டுமே ஈடுபட்டுள்ளதாகவும் ஏனையவர்கள் தொடர்பில் அவர் கவனம் செலுத்தவில்லை எனவும் கொழும்பு ஊடகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுதான்.. இந்த துணிச்சல்தான், ஜனாதிபதி அவர்களே, நீதிவேண்டும் மக்களும் உலகமும் உங்களிடத்தில் எதிர்பார்த்திருக்கும் ஒன்று!
ReplyDeleteஇது தொடரவேண்டும்...!