சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அச்சுறுத்தல்
நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த சம்பவத்தின் பின்னர் தனக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்திற்குள் தம்மை சுயாதீமான அணியாக ஏற்றுக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்தவாறு சபை நடுவில் நேற்று எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு சபாநாயகர் இதன் போது அறிவுரை வழங்கினார்.
கூட்டு எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புக்கு மத்தியில் சபாநாயகர் நேற்று சபையை வழிநடத்திச் சென்றார்.
எவ்வாறாயினும் இந்தச் சம்பவத்தை அடுத்து நேற்றிரவு தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் கூட்டு எதிர்க்கட்சியினரின் கோரிக்கை இடமளிக்குமாறு கூறி அச்சுறுத்தியதாக கூறியுள்ளார்.
எனினும் தான் இந்த அச்சுறுத்தல்களை பெருட்படுத்தப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment