Header Ads



அனுராதபுரத்தை தலைநகரமாக்க கோரிக்கை

அனுராதபுரத்தை மீண்டும் தலைநகரமாக்க வேண்டும் என அரசியலமைப்பு மறுசீரமைப்பு குழுவிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு மறுசீரமைப்பு குழு இன்று காலை அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் கூடிய பொதுமக்களின் கருத்துக்களை பெற்று வருகிறது. 

குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க உறுப்பினர்களான சுனில் ஜயரத்ன, தெனிய ஹூருல்லே, நதீகா தமயந்தி ஆகியோர் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டு வருகின்றனர். 

இன்று முற்பகல் 9 மணிக்கு ஆரம்பமான இந்த கருத்து கேட்கும் நடவடிக்கை பிற்பகல் 4.30 மணிக்கு முடிவடையும், இதனையடுத்து நாளைய தினமும் பொதுமக்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட உள்ளன. 

அரசியலமைப்பு மறுசீரமைப்பு குழுவின் முதலில் கருத்துக்களையும் யோசனைகளையும் முன்வைத்த ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் ஒன்றின் உறுப்பினர் பியதாச பத்திரண, அரச சேவையில் இருந்து ஓய்வுபெறுவோர் பிரதிபலன்களை பெற்றுக்கொள்வதில் தற்போதைய அரசியலமைப்பு தடையாக இருப்பதாக கூறியுள்ளார். 

இங்கு தனது யோசனைகளை முன்வைத்த பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப பேவந்தர் பேராசிரியர் சீ.எம். மத்துமபண்டார, கொழும்பு நகரை வணிக நகரமாக மாற்றிவிட்டு, அனுராதபுரத்தை அடுத்த தலைநகரமாக மாற்றற வேண்டும் எனக் கூறியுள்ளார். 

இலங்கையில் மன்னர்கள் ஆட்சி செய்த போது, ஆயிரத்து 500 வருடங்களாக அனுராதபுரமே நாட்டின் தலைநகராக இருந்து வந்ததாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் 1023 வருடங்களுக்கு முன்னர் இலங்கையை கைப்பற்றிய முதலாம் ராஜராஜா சோழன், பொலன்நறுவையை நாட்டின் தலைநகரமாக மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. அரசியல் யாப்புக்கு சம்மந்தமில்லாத விடயங்கள்தான் அதிகமான மக்களால் முன்வைக்கப்படுகிறது

    ReplyDelete
  2. நல்ல யோசினை, கொழும்பில் உள்ள நெரிசல் குறைவடையும்.

    ReplyDelete

Powered by Blogger.