பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக, சங்கக்காரவை நியமிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை
எதிர்வரும் மார்ச் மாதம் 08 ஆம் திகதி இடம்பெறவுள்ள ICC t20 கிரிக்கெட் உலக கிண்ணத்திற்காக, பாகிஸ்தான் அணிக்கு ஆலோசனை வழங்குவதற்காக சங்கக்காரவிடம் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு வருகின்றது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் பிரபல்யம் வாய்ந்த வீரர் சேர் விவியன் ரிச்சர்ட்ஸை பாகிஸ்தான் அணியின் இத்தொடருக்கான ஆலோசகராக நியமிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனால், இலங்கையின் நட்சத்திர வீரரான குமார் சங்கக்காரவை இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக கிண்ண ரி20 தொடருக்காக தமது அணியின் ஆலோசகராக குமார் சங்கக்காரவை நியமிப்பது தொடர்பில் அவருடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாகவும் இது தொடர்பில் என்னும் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சஹ்ரியார் கான் தெரிவித்துள்ளார்.

Post a Comment