சுவிஸ் வரலாற்றில் குறை எடையுடன், பிறந்த குழந்தைக்கு வீர மங்கையின் பெயர்
சுவிட்சர்லாந்து நாட்டு வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவருக்கு 390 கிராம் எடையுள்ள பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜேர்மனியில் உள்ள பிரிபோர்க் நகரை சேர்ந்த ரிபாக்கா(21) என்ற பெண் சுவிஸில் உள்ள லூசென்னே நகரில் வசித்து வருகிறார்.
கர்ப்பிணியான இவருக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16ம் திகதி குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
ஆனால், துரதிஷ்டவசமாக கர்ப்பமான காலத்தில் அவருக்கு ரத்தம் அழுத்தம் அதிகரித்துள்ளது. இதனால், சிறுநீர் வழியாக அதிகளவு புரோட்டீன்களும் வெளியேறி வந்துள்ளது.
இதனால், குறிப்பிட்ட திகதிக்கும் முன்னதாகவே குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாகவும், உடனடியாக மருத்துவமனையில் தங்குமாறு அவருக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர்.
ஆனால், லூசென்னே நகரில் போதிய வசதிகள் இல்லாததால், பேர்ன் பல்கலைகழக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், தாயார் ஆபாத்தான நிலையில் இருப்பதை உணர்ந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுக்க தீர்மானித்துள்ளனர்.
இதன் விளைவாக, பிரசவம் ஆவதற்கு 3 மாதங்களுக்கு முன்னதாகவே, அதாவது 2015ம் ஆண்டு நவம்பர் 6ம் திகதி பெண் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் எடுத்துள்ளனர்.
குழந்தையின் எடையை அளவிட்டபோது, அது 390 கிராம் எடை மட்டும் 27 செ.மீ நீளத்துடன் மட்டுமே இருந்துள்ளது. சுவிஸ் வரலாற்றில் மிகவும் குறைவான எடையில் பிறந்த முதல் குழந்தை இது என மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
குழந்தை பிறந்த 4 மணி நேரத்திற்கு பிறகு, தாயாரிடம் குழந்தையை காட்டியுள்ளனர். ஆனால், 10 நாட்கள் வரை குழந்தையை தொடுவதற்கு மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை.
இவ்வளவு குறைவான எடையுடன் குழந்தை பிறந்தாலும், தற்போது வரை மிகவும் அபாரமாகவும் ஆரோக்கியமாகவும் வளர்ந்து வருகிறது.
கடந்த புதன் கிழமை அன்று தான் குழந்தை முதன் முதலாக தீவிர அறுவை சிகிச்சை பிரிவில் இருந்து தாயாரிடம் கொண்டு வரப்பட்டது.
எனினும், குழந்தை மேலும் ஆரோக்கியமாக வளர வேண்டும் என்பதால், மருத்துவமனையில் தாயார் சில நாட்கள் வரை தங்க வேண்டும் என கூறியுள்ளனர்.
இது குறித்து தாயாரான ரிபாக்கா பேசுகையில், ‘குழந்தை பிறந்தவுடன் எடை குறைவாக இருந்தபோது ஒருவித சோகம் ஏற்பட்டாலும், குழந்தை ஆரோக்கியமாக இருந்ததால் மிகுந்த உற்சாகம் அடைந்தேன்.
தற்போது குழந்தைக்கு 2 கிலோ வரை எடை கூடியுள்ளது. பிறக்கும்போதும், இந்த நாள் வரையும் கடுமையான போராட்டத்தை எதிர்க்கொண்டு வரும் என் மகளுக்கு வரலாற்று வீர மங்கையை குறிக்கும் மியா(Mia) என பெயர் சூட்டியுள்ளதாக உற்சாகமாக தெரிவித்துள்ளார்.
Post a Comment