Header Ads



மஹிந்த ராஜபக்ஸவிற்கு, எதிராக வழக்கு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் இவ்வாறு வழக்குத் தொடரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தேர்தல் பிரச்சார விளம்பரங்களுக்கு கட்டணம் செலுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஸ போட்டியிட்டிருந்தார்.

இதன் போது செய்யப்பட்ட விளம்பரங்களுக்கு பணம் செலுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தி வந்தது.

இந்த விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார்.
விரைவில் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

No comments

Powered by Blogger.