ஐ போன் விவகாரம், சூடு பிடிக்கிறது
அமெரிக்காவின் சான் பேர்னாடினோ நகரில் சயிட் ரிஸ்வான் பாருக் மற்றும் அவரது மனைவி ஆகியோர், கடந்த டிசம்பரில் நடத்திய துப்பாக்கி தாக்குதலில், 14 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 22 பேர் காயமடைந்தனர். அவரது ஆப்பிள் ஐபோனை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். ஆனால், அவரது போன் ரகசிய குறியீடு மூலம் லாக் செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தீவிரவாதி சயிட் ரிஸ்வான் பாருக்கின் ஐ போனை கைப்பற்றியவுடன், எப்.பி.ஐ. தொழில் நுட்ப வல்லூநர்கள் ரகசிய குறியீடு மூலம் லாக் செய்யப்பட்டிருந்த ஐ-கிளவுட் பாஸ்வேர்டை மாற்றியமைத்து அதை திறக்க முயன்றுவுள்ளனர். ஆனால் அது முடியாமல் போய்விட்டது. இதனையடுத்தே அவர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளனர்.
இதற்கு ஆப்பிள் நிறுவனம் மறுத்துவிட்டது. ஆப்பிள் போனிற்குள் அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ.-யை நுழைய அனுமதித்தால், வருங்காலத்தில் அவர்கள் ஆப்பிள் போன் வாடிக்கையாளர்களின் போனிற்குள் முறையற்ற வகையில் நுழைய அது வழிவகுத்துவிடும் என்று ஆப்பிள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், இந்த நீதிமன்ற உத்தரவை ஆப்பிள் சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று ஆப்பிள் நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள அறிகையில் ’ஐ-கிளவுட் பாஸ்வேர்டை மாற்றியமைக்க முயலாமல் நேரடியாக எங்களிடம் வந்திருந்தால், ஐ-கிளவுடில் இருந்த தகவல்களை பாதுகாப்பாக எடுத்திருக்க முடியும். ஆனால் இப்போது அந்த தகவல்களை மீட்பது முடியாத காரியம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment