தற்போதைய அரசாங்கம், கொள்ளையடிப்பதிலிருந்து தவிர்ந்துகொள்ள வேண்டும் - சந்திரிகா
நாட்டின் நலனை முன்னிட்டு அனைத்து அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டுமென்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக அழைப்பு விடுத்துள்ளார்.
சந்திரிகாவின் கணவர்- பிரபல அரசியல் தலைவரும், சிங்கள நடிகமான விஜயகுமாரதுங்கவின் 28வது ஞாபகார்த்த தினம் கொழும்பில் அனுட்டிக்கப்பட்டிருந்தது.
மஹஜன கட்சியின் ஏற்பாட்டில் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
குறித்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
குறுகிய அரசியல் நலன்களை முன்னிறுத்தி செயற்படும் அரசியல் தலைவர்களின் செயற்பாடுகள் காரணமாக நாட்டின் அபிவிருத்திப் பயணம் தடைப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் தற்போதைய அரசாங்கம் ஊழல் மோசடிகளில் இருந்து விடுபட்டு, தனிப்பட்ட சுயலாபங்களுக்காக கொள்ளையடிப்பதிலிருந்து தவிர்ந்து நடந்து கொள்ள வேண்டுமென்று நான் எதிர்பார்க்கின்றேன்.
அதே போன்று அனைத்து அரசியல் தலைவர்களும் தனிப்பட்ட அரசியல் நலன்களை மறந்துவிட்டு நாட்டின் நலனுக்காக ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் ராஜித சேனாரத்ன, முன்னாள் அமைச்சர் ஜீவன் குமாரணதுங்க,விஜய குமாரதுங்கவின் மூத்த சகோதரி ரூபா குமாரதுங்க ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
அரசியல் எந்த இடத்தில் நின்று பேசுகின்றீர்கள்.உங்கள் கணவரின் ஞாபகார்த்த வைபவத்திலுமா? நீங்கலெல்லாம் சரியாக இருந்திருந்தால் ஒரு பிரட்சனையும் வந்திருக்காது.
ReplyDeleteதற்போதைய அரசிலும் ஊழல்கள் நடக்கின்றது என்பது அம்மனிக்கு தெரிந்துவிட்டது கேட்கப்பார்க்க ஆல் இல்லாட்டி ஆட்டையபோட்டுக்கொண்டே இருப்பார்கள் அதனால் இது ஒரு நல்ல செய்தியாக இருக்கட்டும்
ReplyDelete