Header Ads



மாநாயக்க தேரர்களுடன், ஹுசைன் சந்திப்பு

(க.கிஷாந்தன்)

இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு வெளிநாட்டு விசாரணைப் பொறிமுறை அவசியமில்லை – என்று அஸ்கிரிய, மல்வத்து ஆகிய பீடங்களின் மாநாயக்க தேரர்கள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் 08.02.2016 அன்று கோரிக்கை விடுத்தனர்.

நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயத் ரா அத் – அல் ஹுசைன் 08.02.2016 அன்று முற்பகல் கண்டிக்கு பயணம் மேற்கொண்டார்.

கண்டி தலதா மாளிகைக்கு சென்ற அவரை பஸ்நாயக்க நிலமே வரவேற்றார். பின்னர் இருவருக்குமிடையில் சந்திப்பு நடைபெற்றது.

அதன்பின்னர், அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்கர்களை சந்தித்து மனித உரிமைகள் ஆணையாளர் ஆசீகளை பெற்றுக்கொண்டார். தனது இலங்கைப் பயணத்தின் நோக்கம் குறித்து அவர் விவரித்துள்ளார்.

இதன்போது வெளிநாட்டு விசாரணைப் பொறிமுறை அவசியமில்லை என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





No comments

Powered by Blogger.