Header Ads



தான் அனுபவித்துவரும் கஷ்டங்களுக்கு, முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் மைத்திரி

- கஜானி வீரக்கோன்-

வரப்போகும் உள்ளுராட்சி சபை தேர்தல்களில் தனது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை (President-Maithripala-Sirisenaஎஸ்.எல்.எப்.பி) எவ்வாறு வெற்றியை நோக்கி வழி நடத்திச் செல்வது என்பது தனக்குத் தெரியும் என அவர் வலியுறுத்தியிருப்பதினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக தான் அனுபவித்து வரும் கஷ்ட நஷ்டங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார் எனத் தோன்றுகிறது, அதனால் மற்றவர்கள் அவரது முதுகில் குத்த முயற்சி செய்யமால் அவர் அவரது வேலையை செய்ய விட்டுவிட வேண்டும்.

எஸ்.எல்.எப்.பி அங்கத்தவர்கள் மற்றும் அரசாங்க அமைச்சர்களுடன் ஜனாதிபதி சிறிசேன கடந்த ஒரு வாரத்துக்கு இடையில் அடுத்தடுத்து நடத்திய சந்திப்புகளில் அவர் ஒருமுறை மாத்திரமல்ல பல சந்தர்ப்பங்களில் உறுதியான ஒரு கொள்கையை பின்பற்றி வருகிறார் எனத் தெரிகிறது. கட்சியில் தற்போது இடம்பெற்று வரும் விரிசல்களைப் பற்றி அவர் பெரிதாகக் குரல்கொடுக்க வில்லை மற்றும் குறைந்தது அரசியல் அரங்கில் முன்னேறி வரும் விடயங்கள் தொடர்பான தனது எரிச்சலை அடக்கிக் கொள்ளப் போதுமான அளவுக்கு அவர் தன்னைப் பதப்படுத்தி உள்ளார், என்பதை நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ள எஸ்.எல்.எப்.பி அமைச்சர்களிடம் தன்னை கட்சியை கொண்டு நடத்த விடுவது மற்றவர்களுக்கு நல்லது எனத் தெரிவித்திருப்பதன் மூலம் தெளிவாக வெளிப்படுத்தி உள்ளார், இது அடையாளப் படுத்துவது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவரது பகுதியினரால் வெளிப்படுத்தும் அழுத்தங்களுக்கு அவர் அடங்கப் போவதில்லை என்பதையே.

ஜனாதிபதி சிறிசேன கடந்த செவ்வாயன்று (26.01.2016) காலை சிறிமாவோ பண்டாரநாயக்கா வித்தியாலயத்தில் இடம்பெற்ற ஒரு உடற்பயிற்சித் திட்டத்தில் கலந்துகொண்டபின், இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பேஜ் வீதியில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பியிருந்தார்.

எதிர்ப்பு பொறிமுறை தேவை

தற்போதைய அரசியல் விவகாரங்களைப்பற்றிய ஆரம்ப பேச்சுக்களின் பின்னர், கூட்டத்தின் கவனம் தேர்தல் பிரச்சாரங்களை நடத்துவதைப் பற்றிய கட்சியின் திட்டங்களைப் பற்றித் திரும்பியது. கூட்டு எதிர்க்கட்சி, உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்களை ஊடகங்களுக்கு முன்பாக வந்து முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஸ தேர்தல் பிரச்சாரத்துக்கு தலைமை தாங்க வேண்டும் என்று கோரிக்கை விடும்படி தூண்டி வருகிறது என எஸ்.எல்.எப்.பி அமைச்சர்கள் சுட்டிக்காட்டினார்கள். இந்தப் பிரச்சாரத்தை எதிர்ப்பதற்கும் மற்றும் கட்சியின் செயற்பாட்டை அடிமட்டத்தினரிடம் கொண்டு செல்வதற்கும் ஒரு பொறிமுறை அவசியம் என்பதை வலியுறுத்தினார்கள்.

ஜனாதிபதியும் கூட கூட்டு எதிர்க்கட்சியினரின் பிரச்சாரங்களுக்கு பதிலடி கொடுப்பதற்கு ஒரு நுட்பமான பொறிமுறை இருக்க வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்டதுடன், இது தொடர்பான சந்திப்புகளை தேர்தல் அமைப்பாளர்களுடன் ஏற்பாடு செய்வதற்கான பணியை எஸ்.எல்.எப்.பி யின் பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக்காவிடம் ஒப்படைத்தார். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே துமிந்த, ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களுடன் கலந்துரையாடல்களையும் மற்றும் கருத்தரங்குகளையும் நடத்துவதற்காக அமைச்சர்களிடம் திகதிகளைப் பெற்றுக்கொண்டார். ஜனாதிபதி சிறிசேன அமைச்சர்களிடம் முறையே அவர்களது தொகுதியில் அவர்கள் எதிர்கொள்ளும் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் கூறும்படி கேட்டுக் கொண்டபோது, அமைச்சர் பிரியங்கர ஜயரட்னதான் முதலில் பேச்சைத் தொடங்கினார்.

ஆனமடுவ அமைப்பாளராக தான் இருந்த போதிலும் கூட, முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஸ தனக்கு கூடத் தெரியாமல் ஒரு கூட்டத்திற்கு வந்திருந்ததாக அவர் சொன்னார். ஜயரட்ன மேலும் அந்தக் கூட்டம் அமைச்சர் அருந்திக பெர்ணாண்டோவின் செயலாளரால் கூட்டப்பட்டது எனவும் வெளிப்படுத்தினார். ஜனாதிபதி இந்த விடயத்தில் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு பிரச்சினைக்குரிய செயலாளரை  பதவி நீக்கம் செய்யவேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார், ஆனால் அமைச்சர் தனது செயலாளரை பாதுகாக்கும் விதமாக முன்வந்து அவரை பதவி நீக்கம் செய்வதற்குப் பதிலாக அவருக்கு கடுமையான எச்சரிக்கை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார், ஜனாதிபதி சிறிசேனவும்கூட இதற்குச் சம்மதித்தார்.

மனக்குறைகளை தெரிவிப்பது அத்துடன் முடிவடைந்து விடவில்லை, அமைச்சர் சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே கூறுகையில், ஒரு சிறிய குழுவான உள்ளுராட்சி மன்ற அங்கத்தவர்கள் மட்டுமே ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவித்து ஊடக சந்திப்புகளை நடத்திய போதிலும்கூட ஊடகங்கள் அதை அளவுக்கு மீறிய விகிதத்தில் ஊதிப் பெருப்பித்து பெரும்பான்மையான உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரித்துள்ளதாக ஒரு கருத்தைப் பரப்பியுள்ளன என்றார். அதில் இணைந்து கொண்ட சந்திம வீரக்கொடி, ஒரு சிறிய குழுவினரே கட்சிக்கு எதிராகப் போய்க்கொண்டிருக்கிறார்கள் மற்றும் அரசியல் தலைமையும் மற்றும் தேசிய மட்டத்திலான தலைவர்களும் இந்த தொகுதிகளுக்கு போய் மக்களுடன் நெருக்கமாக வேலை செய்ய ஆரம்பித்தால் இந்த விடயம் ஒரு முடிவுக்கு வந்தவிடும் எனத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பெர்ணாண்டோபுள்ளே பேசுகையில்,” பிரச்சினை முழுவதுமே மகிந்த ராஜபக்ஸ, தான் 8 ஜனவரி 2015ல் தோற்கடிக்கப் பட்டுவிட்டோம் என்பதை ஏற்றுக் கொள்ளாததினால்தான் உருவாகியுள்ளது எனத் தெரிவித்தார். அமைச்சர் மகிந்த சமரசிங்க இந்த விடயத்தை தான் எப்படிக் கையாண்டேன் என்பதைப் பற்றிக்கூறினார். ஒரு சிறிய குழு ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவித்து ஊடக சந்திப்பை நடத்தியபோது, தானும்கூட ஜனாதிபதி மைத்திரியின் பின்னால் ஒரு பெரிய கூட்டமே உள்ளது என்பதைக் காண்பிக்கும் வகையில் ஒரு ஊடக சந்திப்புக்கு ஏற்பாடு செய்து காட்டியதாக அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியது ஒருமுறை இப்படியான விடயங்களை செய்ய ஆரம்பித்தால் மற்றக் கட்சியினர் தங்கள் கால்களை பின்னுக்கு எடுத்துக் கொள்வார்கள் என்று.

இதற்கிடையில் உத்தேச பிக்கு கத்திகாவத்த மசோதா பற்றிப் பேசுகையில், அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா, இது ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பொறி எனத் தான் கருதுவதால் எஸ்.எல்.எப்.பி இதிலிருந்து தூரமாக விலகவேண்டும் என்றும் இதன்படி எந்த ஒரு எஸ்.எல்.எப்.பி அமைச்சரும் இந்த விடயத்தில் அறிக்கைகளை அல்லது கருத்துக்களை வெளியிடக்கூடாது எனத் தெரிவித்தார்.

எனினும் அமைச்சர் கலாநிதி. அமுனுகம இந்த விடயத்தில் வித்தியாசமான அணுகுமுறையை கொண்டிருந்தார். இந்த விடயத்தில் ஊமையாக இருப்பதற்குப் பதிலாக உண்மையில் கட்சி, மகா சங்கத்தால் ஒப்பக்கொள்ளப்படாத எந்த ஒரு சட்டத்தையும் எஸ்.எல்.எப்.பி பின்துணைக்காது என்று ஒரு அறிக்கையை விடவேண்டும் எனத் தெரிவித்தார். ஜனாதிபதி சிறிசேனவும் அமுனுகமவின் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டதுடன் அப்படிச் செய்வதற்கும் சம்மதித்தார்.

எஸ்.எல்.எப்.பியின் பாதீட்டு குழு

எஸ்.எல்.எப்.பி அமைச்சர்கள் மேலும் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்தது, வரவு செலவு திட்டத்துக்கு தங்கள் கட்சி கொண்டுவந்த மாற்றுப் பிரேரணைகள் மற்றும் திருத்தங்கள் நடைமுறைப் படுத்தப்படவில்லை அல்லது நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்காவின் பக்கத்திலிருந்து அதை செயற்;படுத்துவதற்கான எந்த முன்னேற்றமும் காண்பிக்கப் படவில்லை என்பதை. அப்போது இந்த விடயத்தை பின்தொடருவதற்காக அமைச்சர்கள் எஸ்.பி திசாநாயக்கா, கலாநிதி. சரத் அமுனுகம, டிலான் பெரேரா மற்றும் சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே ஆகியோரைக் கொண்ட ஒரு குழு நியமனம் செய்யப்பட்டது. எனினும் பின் ஒரு சந்தர்ப்பத்தில் அவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவையும் மற்றும் ஜனாதிபதி சிறிசேனாவையும் ஒரே மன்றில் வைத்து சந்தித்தபோது அவர்கள் இந்த விடயத்தை முன்வைத்தார்கள். பிரதமர் விக்கிரமசிங்கா  தான் வரவு செலவு திட்ட திருத்தங்கள் அனைத்தையும்; மார்ச் மாதம் ஒன்றாக சபையில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக வாக்குறுதி வழங்கினார், இதன்படி எஸ்.எல்.எப்.பி யினரது திருத்தங்களும்கூட அதில் ஒருங்கிணைக்கப்படும்.

பலசாலியான மைத்திரி

ஜனாதிபதி சிறிசேன எஸ்.எல்.எப்.பி அமைச்சர்களுடன் நடத்திய இந்தக் கூட்டத்தின்போதுதான் அவர் முதல்முறையாக கட்சியின் தலைமையை பற்றி வாய்திறந்துள்ளார். “இந்த அரசாங்கத்தை பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. மறுபக்கத்தில் கட்சி என்னிடம் ஒப்படைக்கப் பட்டிருப்பதால் கட்சி விடயங்களைக் கவனிப்பதற்கான சுதந்திரத்தையும் அவர்கள் எனக்குத் தரவேண்டும். இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள்தான், நான் முன்னின்று நடத்தும் முதலாவது தேர்தல் மற்றும் தற்சமயம் கட்சியில் உள்ள அனைவருக்கும் நான் நியமனங்களை நிச்சயம் வழங்குவேன். இந்தக் கட்சியை எப்படி வெற்றியை நோக்கி இயக்கிச் செல்வது என்று எனக்குத் தெரியும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து சென்று பல்வேறு அரசியற் கட்சிகளை ஆரம்பித்தவர்களுக்கு என்ன நடந்தது என்று நமக்குத் தெரியும். சந்திரிகா குமாரதுங்க உட்பட அனைவருமே கட்சிக்கு திரும்பியுள்ளார்கள். எனவே எஸ்.எல்.எப்.பி யின் வரலாறு தெரிந்தவர்கள் கட்சியைப் பிளவு படுத்த துணியமாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் சொன்னார்.

இந்தக் கூட்டம் முடிவடைந்த உடனேயே ஜனாதிபதி சிறிசேன, எஸ்.எல்.எப்.பியின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கொழும்பிலுள்ள மகாவலி மையத்துக்கு காலை 10 மணியளவில் சென்றார்.

No comments

Powered by Blogger.