ஒரு முஸ்லிம் தலைவரின், பெயர்கூட இல்லையா..?
மஹாராஸ்டிராவில் கொண்டாடப்படும் தேசிய தினங்களின் பட்டியலில் ஒரு முஸ்லிம் தலைவரின் பெயர் கூட இல்லையா என மும்பை உயர் நீதிமன்றத்தில் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மஹாராஸ்டிரா அரசு கடந்த 2014ம் ஆண்டு, தேசிய தலைவர்களை கவுரவிக்க கொண்டாடும் 26 நாட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஆனால் அந்த தேசிய தலைவர்கள் பட்டியலில் ஒரு முஸ்லிம் தலைவர்களின் பெயர் கூட இடம்பெறவில்லை.
இது தொடர்பாக சர்பராஸ் அர்ஸூ என்ற மூத்த பத்திரிக்கையாளர் மட்டும் செயற்பாட்டாளர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், சிறுபான்மை இனத்தவரான முஸ்லிம் மக்களில் சிறப்பாக செயல்பட்ட தலைவர்களின் பெயர்கள் அந்த மாநில அரசு பட்டியலில் திட்டமிட்டே சேர்க்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், மௌலொனா அபுல் கலாம் ஆசாத், ஜாகீர் ஹுசைன், திப்பு சுல்தான் என பல முஸ்லிம் தலைவர்கள் இருக்கும் நிலையில், ஒருவரின் பெயர் கூட சேர்க்கப்படாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவை சேர்ந்த முஸ்லிம் தேசிய தலைவர்களையும், அவர்கள் ஆற்றிய பணிகளையும் வருங்கால இந்திய தலைமுறையிடம் இருந்து திட்டமிட்டு மறைப்பது தவறு என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment