முஸ்லிம் கூட்டமைப்புக்கு, முஸ்லிம் விவகார அமைச்சரும் பச்சைக்கொடி
(ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்)
முஸ்லிம் கூட்டமைப்பில் இணைந்து பணியாற்ற தான் தயாராகவிருப்பதாக முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
முஸ்லிம் நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் ஒன்றுபட்டு குரல் கொடுக்கும் நோக்குடன் நிறுவப்படவுள்ள முஸ்லிம் கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்ற நான் தயார்.
அவ்வாறான ஒரு பலமான முஸ்லிம் கூட்டமைப்பு முஸ்லிம்களுக்கு அவசியம். இதனை நான் முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறேன். அதனுடன் இணைந்து பலியாற்றவும் தயாராகவுள்ளேன் என்றார்.
Post a Comment