Header Ads



உங்களுடைய பிள்ளைகளுக்கு என்ன நடக்குமென, பொறுத்திருந்து பாருங்கள் - நாமல் எச்சரிக்கை

நல்லாட்சியில் ஈடுபடுவர்களுக்கும் பிள்ளைகள் உண்டு. அவர்களின் பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என நாமல் ராஜபக்ஷ தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.

கைது செய்­யப்­பட்டு விளக்­கம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் மகன் லெப்­டினன் யோஷித ராஜ­பக் ஷ உள்­ளிட்ட ஐவ­ருக்கு 2 ஆவது முறை­யா­கவும் பிணை வழங்க மறுத்த கடு­வலை நீதிவான் தம்­மிக ஹேம­பால, அனை­வ­ரையும் எதிர்­வரும் மார்ச் 10 ஆம் திக­தி­வரை தொடர்ந்தும் விளக்­க­ம­றி­யலில் வைக்க நேற்று உத்­த­ரவு பிறப்­பித்தார்.

இந்த பிணை மறுப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எமது குடும்பத்தை பழிவாங்கும் நோக்கிலேயே திட்டம் தீட்டி பிணை மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு நிதி குற்றப்பு புலனாய்வு பிரிவினரும் உடந்தை. 1989-90 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ; இவ்வாறே எங்கள் கிராமங்கள் மீது குண்டுகளை விசி தாக்குதல் நடத்தி தமது எதிர்ப்பை காட்டினர். ஆனால் இன்று பொது சொத்துக்களை ஆவணங்களாக வைத்து கொண்டு தமக்கெதிராக செயற்படுகின்றனர்.

1 comment:

  1. சபாஷ் திரு. நாமல்! உங்களையெல்லாம் பிடித்து உள்ளே போடுவதில் தப்பே கிடையாது என்பதை நீங்களே உங்கள் வாயால் உலகிற்கு நிரூபித்துக் காட்டுகின்றீர்கள்! ஆனால் இந்த மிரட்டலுக்கெல்லாம் இங்கே யாரும் பயப்படப்போவதில்லை!

    நல்லாட்சி அரசியல்வாதிகளின் வாரிசுகள் மோசடிகளையும் ஊழல்களையும் புரியாமலே உங்களுக்குப் பயப்பட வேண்டியிருக்குமாயின் உங்களிடம்தான் பழிவாங்கும் குணம் மண்டிக்கிடக்கின்றது என்பதை இனிமேல் உங்களை ஆதரிப்பவர்களும்கூட தெளிவாகப் புரிந்துகொள்வார்கள்!

    ReplyDelete

Powered by Blogger.