வாய் திறக்காத ஹுஸைனும், முஸ்லிம் கூட்டமைப்பின் அவசியமும்..!!
-ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்-
இலங்கைக்கு வியஜமொன்றை மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஹுஸைன் இலங்கை முஸ்லிம்கள் குறித்து வாய் திறக்காத விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
* பயங்கரவாதப் புலிகள் மேற்கொண்ட முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகள்.
* வடக்கிலிருந்து முஸ்லிம்களi புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்தமை
* அவ்வாறு இனச்சுத்திகரிப்பு செய்யப்ட்ட முஸ்லிம்கள் தொடர்ந்து அகதி முகாம்களில் தங்கியுள்ளமை.
* மீள்குடியேற்றப்ட்ட முஸ்லிம்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கபட்டாமை
* தென் இலங்கையில் பௌத்தசிங்கள பேரினவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட அக்கிரமங்கள்.
* இந்த அக்கிரமங்களுக்கு மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசு வழங்கிய ஆசிர்வாதம்
மேற்சொன்ன அனைத்தும் முஸ்லிம் சமூகத்திற்கெதிரான அடிப்படை மனித உரிமை மீறல்களுடன் கலந்த வன்முறைப் பதிவுகளாகும்.
முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீம் பிள்ளை இலங்கைக்கு வந்தபோதுகூட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களை சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆனால் இந்த சயீட் ஹுஸைன் இலங்கை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்த வாய் திறக்கவேயில்லை. அவர் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில்கூட முஸ்லிம்கள் குறித்து மூச்சு விடவில்லை. அவர் வெளியிட்ட அறிக்கையில்தானும் எந்த வார்த்தையும் முஸ்லிம்களைப்பற்றி இல்லை.
ஆனால் ஹுஸைன் மலையக மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இங்குதான் இலங்கை முஸ்லிம்களின் பலமான அரசியல் கூட்டமைப்பு ஒன்றில் அவசியம் உணரப்படுகிறது.
பலமான முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்று இருந்திருக்குமானால் நிச்சயம் ஹுஸைன் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து அவதானம் செலுத்தி, தனது வாயை திறந்திருப்பார்.
இலங்கை முஸ்லிம் கட்சித் தலைவர்கள் தமது கட்சிகளுக்கான தலைவர்களாக இருந்துகொள்ளட்டும். பிரச்சினையில்லை.
ஆனால் இலங்கை முஸ்லிம் விவகாரம் என வரும்போது, முஸ்லிம் நலன்கள் என வரும்போது அவர்கள் ஒன்றுபட்டுச் செயற்படுவது காலத்தின் அவசியமாக உள்ளது.
ஹக்கீம், றிசாத், ஹிஸ்புல்லா, அதாவுல்லா, பேரியல், பௌஸி என முஸ்லிம் அரசியல் சக்திகளும் ஒன்றுபட்டு ஒரு கூட்டமைப்பை உருவாக்குவது காலச்சிறந்ததென ஜப்னா முஸ்லிம் சுட்டிக்காட்ட விரும்புகிறது.
இதுதொடர்பில் முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் தனிப்பட்ட, உத்தியோகபூர்வமாக பேசுவதற்கு ஜப்னா முஸ்லிம் இணையம் தயாராகவுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தை நாம் தவறவிடுவோமாயின் அரசியலமைப்பு + தேர்தல் முறை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் முஸ்லிம் சமூகத்திற்கு அநீதி இழைக்கப்படும் சாத்தியத்தை எச்சரிக்கையுடன் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
மிக ஆழமான தூர நோக்குப்பார்வையும் சமூகத்தின்அக்கரையுணர்வும்.....
ReplyDeleteEnter your comment...
ReplyDeleteதமிழ் கூட்டமைப்பு போல் முஸ்லிம் கூட்டமைப்பு சரியான ஒன்றுதான் ஆனால் நடக்க வேண்டுமே பூனைக்கு மணி கட்டுவது யார்??
அன்ஸிர் அவர்களே, ஹுசைன் வாய்திரப்பதட்கு முதல் யாராவது ஹுசைன் ஐ சந்திப்பதற்கான முயற்சியை எடுத்தார்களா? இல்லை நீங்கள் கூறிய முஸ்லிம்களின் பிரச்சினைகளை அவரிடம் முறையாக முறையிட்டீர்களா? அடுத்த விடயம் அவர் பெரும்பாலும் இனப்பிரச்சினை சம்பந்தமாக பொதுவாகவே கருத்துக்களை கூறியுள்ளார். எந்த ஒரு தனிப்பட்ட இனத்துக்காகவோ, குளுவுக்காகவோ சார்பாக பேசவில்லை. இது ஹுசைனை குறை கூறுவதை விட இலங்கை முஸ்லிம்களும், அதன் அரசியல் தலைவர்களும் விட்ட தவறு என்பது எமது பணிவான கருத்தாகும்.
ReplyDeleteநீங்கள் இந்த அரசியல் வியாபாரிகளை ( ஒருத்தரிடமும் முழுமையான உருப்படியான தீர்வும் அதற்கான எழுத்துருவமும் இல்லை) ஒன்றுபடுமாறு அழைப்பு விடுகிறீர்கள். இவர்கள் ஒன்று சேர்ந்தாலும் இங்கும் தங்களது தனிப்பட்ட வியாபாரத்தையே நடாத்த எத்தனிப்பார்கள். ஒரு நிபுணர் குழுவை நியமித்து அதனுடன் நீங்கள் கூறிய அரசியல் வாதிகளையும் இணைத்துக் கொள்ளலாம்.
நமது சமூகம் தொடர்பான அன்சீரின் உணர்வுகளை பாராட்டுகின்றேன் ...........
ReplyDeleteஉங்களை போன்ற ஊடகவியலார்கள் நம் சமூகத்திற்கு இன்னும் இன்னும் தேவை .....
நீங்க முஸ்லிம் கூடமைப்ப உருவாக்கினா அதுக்கு வருடாந்த ஒதுக்கீடு செய்விங்களா.. இல்லாட்டி எங்களால வர முடியாது ..
ReplyDeleteRauf Hakeem does not care about Northern Muslims because there isn't any vote bank for him in the North. He never spoke a word about the plight of Northern Muslims in Parliament, never spoke when several Mosques were attacked, but he spoke a lot when a Muslim business establishment was attacked in the suburb of Colombo. Why, because either he was after votes or may be the owner is his friend or relative.
ReplyDeleteMust not forget at this moment that he had lunch with Prabakaran.