Header Ads



நாளைய தினம் கொண்டாடவிருக்கும், சுதந்திர தினமானது உண்மையான ஒன்றல்ல - சிங்கலே

நாளைய தினம் கொண்டாடவிருக்கும் சுதந்திர தினமானது உண்மையானது ஒன்றல்ல என்பதை பொதுமக்களுக்கு வலியுறுத்தும் முகமாக சிங்களலே  அமைப்பினர் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வு நாளை (4) ஹோமாகம நகரில் இடம்பெறும் என்றும் இதன்போது மக்களை தெளிவுபடுத்துவதோடு, சிங்கள மக்களை ஒன்றிணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக சிங்களலே அமைப்பின் தலைவர் யக்கலமுல்ல தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேசிய கீதத்தை தமிழ்மொழியில் நாளைய தினம் பாட இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவும்,நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய பௌத்த துறவிகளை சிறையில் அடைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தும் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடு தற்போது ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் இருப்பதாகவும்,பௌத்த மதம் கொச்சைப்படுத்தப்படுவதாகவும் சிங்கள அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளதுடன் இந்த விடயங்கள் தொடர்பாக பொதுமக்களை தெளிவுப்படுத்தற்காகவே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்துள்ளதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

2 comments:

  1. Inth nihalvai HOMAGAMVIL nadatha anumathi alithathu yaar? Intha Arasangam thane?
    Oru naatil irandu suthanthira thina nalvu.

    ReplyDelete

  2. ஆம் துறவிகளே நீங்கள் கூறுவது உண்மைதான்! நமது நாட்டுக்கு சுதந்திர தினம் பெப்ரவரி 4 அல்ல; ஜனவரி 9!

    ReplyDelete

Powered by Blogger.