Header Ads



புதிய நூற்றாண்டில் எமது கட்சியின், அடுத்தகட்ட அரசியலை மேற்கொள்ள வேண்டும் - ஹக்கீம்

-எப்.முபாரக்-

எந்தக் கட்சியாலும் நாட்டிலுள்ள மக்களை பயன்பெறும் வகையில் சேவைகள் அமையவில்லை அத்தோடு கட்சிகளின் குழுக்களினால் அவை நிவர்த்திக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் தேசிய நீர் வழங்கள் வடகாலமைப்பு, நகர திட்டமிடல் அபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

விழுதுகளைக் காக்கும் விழுமியம் எனும் தொனிப் பொருளில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (14) ஆளுனர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போதே பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்: 

திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பின்னடைகள் மற்றும் போக்குகள் பற்றி இளைஞர்கள் தெளிவு படுத்தியதன் மூலம் பரினமிக்க சிறு சிறு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு இளைஞர்களும் தங்களின் ஊர் சார்ந்த பிரதேசம் சார்ந்த மற்றும் மாவட்டம் சார்ந்தபிரச்சினைகளை தலைமைக்கு தெளிவு படுத்த வேண்டும்.அத்தோடு இந்த இளைஞர் மாநாட்டின் மூலம் அடுத்த வெற்றிகளை பெறக்கூடியதாக அமைய வேண்டும்.

கட்சியின் இளைஞர்கள் பங்கு அளப்பறியது அவர்கள் ஊடாக சேவைகளை மற்றும் கட்சியின் செயற்பாடுகள் பரினமிக்க வேண்டும்.அத்தோடு அடுத்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம்  காங்கிரஸின் மாதர் மாநாடுகளையும் இளைஞர் கூட்டங்களையும் நடத்த வேண்டும்.

எமது நாட்டில் துடிப்பாக இயங்குகின்றவர்களை பார்த்து சிறந்த இளைஞர்களையும், மாதர்களையும் பயிற்சிக்காக வேண்டி வெளிநாடுகளுக்கு பயிற்சிக்காக அனுப்பவுள்ளோம்.அத்தோடு திருகோணமலை மாவட்டாத்தில் முதலாது தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்றோம் இப்போது புதியவர்கள் வந்து பதவிகளை பெற்றுவிட்டு தனக்கும் ஒரு கட்சி வேண்டும் அமைச்சர்களாக இருப்பவர்களும் ஒரு கட்சி வேண்டும் இவ்வாறு இந்நாட்டில் உள்ள உதிரிக் கட்சிகள் செயற்பட்டு வருகின்றன இவ்வாறு பதவிகளை பெற்று இருப்பதற்காக அமைக்கப்பட்டது அல்ல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அது தனித்துவமான தீர்மானங்களை பெற்று வழிநடத்துகின்ற கட்சியாகும்.

கடந்த தேர்தலில் தோல்விக்கான காரணங்களை ஒவ்வொரு ஊர்களிலும் இருக்கின்ற இளைஞர்கள் சிந்திக்க வேண்டும் அது கட்சியின் தவறா அல்லது தாலைமையின் தவறா என சிந்திக்க வேண்டும்.

புதியவர்களை இணைத்துக் கொண்டு கட்சியை வழிநடத்துகின்ற செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். புதிய அரசாங்கம் திருகோணமலை மாவட்டத்தையும் அதனை அண்டிய பகுதியையும் முழுமையாக அபிவிருத்தி செய்கின்ற வேளைகளில் எமது அரசாங்கம் இறங்கியுள்ளது. அத்தோடு பட்டப்படிப்புகள் ஹோட்டல்கள் மற்றும் பயிற்சி கல்லூரிகளையும் அமைப்பதற்கான வேளைகளையும் மேற்கொள்ளவுள்ளோம்.                  கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை அனைத்து கட்சிகளும் இணைந்து சிறந்த முறையில் மேற்கொண்டு வருகின்றோம். அத்தோடு அனைத்து கட்சிகளாலும் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலே உள்ளது மக்களுக்காக வேண்டி ஒவ்வொரு மாதமும் நடமாடும் சேவைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வோரு மாதமும் மக்களை சந்திக்கின்ற செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் இதனை கட்சி உயர்பீட உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானிக்க வேண்டும் ஒரு கட்சி போராளி ஒரு ஆலோசனை வழங்கியிருந்தார். அதுதான் வீட்டுக்கு வீடு ஒரு மரம் அதனை நடுவதன் மூலம் எவ்வாறு அந்த மரம் வளர்கின்றதோ அதேபோன்று அந்த குடும்பமும் வளர வேண்டும் இதனை ஒரு செயற்திட்டமாக அமைத்து நாடு தழுவிய விதத்தில் மேற்கொள்ள வேண்டும்.                                         இலங்கையில் உள்ள அனைத்து கட்சிகளிலும் ஏதோ ஒரு வகையில் பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கிற்றாது சமூகத்துக்கான புதிய யாப்பில் எழுதிய பறிமாறிக் கொண்ட விதத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

அத்தோடு புதிய தேர்தலைவிகிதாசார அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.அனைவருக்கும் சிறந்த கட்சியாக அனைவரும் மனங்களிலும் அமைய வேண்டும்.இந்த நாட்டிலே அனைத்து முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தெளிவுபடுத்தியே வருகின்றோம் மக்களின் உரிமைகள் சார்ந்த விடயங்களை மேற்கொள்ள வேண்டும்.பெண்களுக்கான உள்ளூராட்சி மன்ற பிரதி நிதித்துவத்தை 25%வீதத்தினை இருக்க வேண்டும்.அத்தோடு எமது கட்சியை மிக விரையில் கட்டியெழுப்பி மாதர்களையும் இணைத்து வழி நடாத்த வேண்டும் புதிய நூற்றாண்டில் எமது கட்சியின் அடுத்த கட்ட அரசியலை மேற்கொள்ள வேண்டும். அனைத்தையும் அனைவரும் ஒன்றினைந்து செயற்படை வேண்டும் என்றிர்.

4 comments:

  1. There is election close by now new plane and new hope for people until the there gole archives.

    ReplyDelete
  2. Best solution is resign from your post.

    ReplyDelete
  3. Ya allah this person paduthhura paadu.

    ReplyDelete

Powered by Blogger.