Header Ads



குரல் கொடுக்கும் பிக்குகள், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கவலை

அரசாங்கம் கடுகளவேனும் அபிவிருத்தியை மேற்கொள்ளவில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (18) பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வாக்குமூலம் அளிக்க வந்த வேளை, ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தனது ஆட்சிக் காலத்தில் நுரைச்சோலை மூன்று கட்ட மின் உற்பத்தி, அதிவேக வீதி, துறைமுகம், விமான நிலையம் போன்றவற்றை நிர்மாணிக்க செலவான மில்லியன் அளவிலான பணத் தொகை, இந்த அரசாங்கத்தால் நுகர்வுக்காக மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இந்த ஆட்சியில் தொலைக்காட்சிகள் மூடப்பட்டுள்ளதாகவும், எதிரணிக்கு ஏசும் தொலைக்காட்சிகள் மட்டுமே உள்ளதாகவும், குரல் கொடுக்கும் பிக்குகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், வேலை கோருபவர்களுக்கு கண்ணீர் புகை வீசுவதாகவும், அபிவிருத்தி என்ற போர்வையில் கொழும்பு மக்களை வெளியே இழுத்து விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது காலத்தில் மக்களை வீதியில் இறங்கிவிட்டு அபிவிருத்திகளை மேற்கொள்ளவில்லை எனவும், முன்னாள் ஜனாதிபதி இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. பிக்குகள் ஏன் எதற்காகக் குரல் கொடுக்கின்றனர்?அவர்கள் இந்த நாட்டின் சிறுபான்மை மக்களை ஓரங்கட்டுவதற்காகத் தான் குரல் கொடுக்கின்றனர். இதற்காக நீங்களும் உங்கள் ஆட்சியில் மேடை போட்டுக் கொடுத்தீர்கள். மக்கள் அவற்றை மறக்கவில்லை என்பதை நீங்கள் மறக்க வேண்டாம்.கீழ்த்தனமான அரசியல் இது!

    ReplyDelete
  2. பக்க்ஷயனின் பாதாளக் கோஸ்டியினர் கொலைகொள்ளையில் ஈடுபட்டு சட்டத்தின் பிடியின் சிக்கினால்....
    நாட்டைக் காத்த ராணுவ வீரன்.... குரல் கொடுக்கும் பிக்கு...
    தேசப் பற்றுள்ளவன்...என்றெலாம் போலி முத்திரை குத்துவது இவனைப் போன்ற சாக்கடை அரசியல் வாதிகளுக்கு கைவந்த கலையே....

    ReplyDelete
  3. பச்சோந்தி...பிக்குவை சந்திக்கப்போகும் போதே விளங்கிவிட்டது அடுத்த பேச்சு எதுவேன்று...

    ReplyDelete

Powered by Blogger.