Header Ads



உலக மக்களால் கவரப்படும் மதங்களில், இஸ்லாம் முதலிடம் வகிக்க காரணம் என்ன..?

ஏ.எல்.எம்.அஸ்ஹர் (ஹாமி) 

என் அன்பின் சகோதர சகோதரிகளே! நாம் நாளாந்தம் பல அதிசையமான,வியப்பான வியக்கத்தக்க தகவல்களை பத்திரிக்கைகள்,தொலைக்காட்சி ஊடாகவும் இன்னும் முகநூல் போன்ற தற்கால நவீன சமூக ஊடகங்கள் ஊடாகவும் கேட்டும்,பார்த்தும் வருகின்றோம். அப்படியான வியப்பான தகவல்களில்லிருந்தும் உள்ளது தான் இஸ்லாமிய மார்க்கத்தில் நுழைந்தார் பூசாரி, இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறினார் இசையமைப்பாளர் , இஸ்லாத்திற்கு வந்தார் விளையாட்டுவீரர், இஸ்லாத்தின் பால் கவரப்பட்டார் நடிகர், இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறினார் நடிகை,இஸ்லாத்தில் வந்தார் பிரபலபாடகி, இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறினார் மொடல் அழகி. இஸ்லாத்திற்கு வந்தது விவசாய்யின் குடும்பம்.இஸ்லாத்தில் இனைந்தது ஓர் கிராமம், இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக மாற்றிக் கொண்டார் அறிவியல் விஞ்ஞானி. 

இதற்கான முதற் காரணம் என்னவென்றால் இறைவனின் அருளாகும். இரண்டாவது அவர்கள் இஸ்லாத்தை படித்து ஆராய்ந்ததின் விளைவுமாகுமே தவிர வேறு எந்த அச்சுறுத்தலுக்காகவும்,கொலைமிரட்டலுக்கும் அவர்கள் மாறவில்லை என்பது தான் உண்மை ஏன் என்றால் இஸ்லாத்தில் நிர்பந்தமும் இல்லை கொலைவெறியும் இல்லை என்பதை நாம் எல்லோரும் அறிந்துள்ளோம். மேலும் இஸ்லாமிய மார்க்கம் மாத்திரம் தான் ஓர் மனிதன் பிறந்தது முதல் அவன் இறக்கும் வரையிலான எல்லா வாழ்க்கை வழிகாட்டல்களையும் மிக அழகாகவும்,அறிவுபூர்வமாகவும் முன்வைபப்தினாலேயுமாகும்.

அதாவது திருமணமுறைகள்,வியாபாரமுறைகள்,ஒழுக்கவியல்,சகோதரத்துவம்,வணக்க வழிபாடுகள், மறு உலகவாழ்வு, (பரலோவவாழ்வு) ஆட்சிஅதிகாரங்கள் போன்ற மனிதனுக்குத் தேவையான இன்னோரன்ன எல்லாத் துறைகளைப் பற்றியும் மிகத் தெளிவாகவும்,அழகாகவும் முன்வைப்பதைக் கண்டு மக்கள் மன நின்மதி எங்கே என்றுஆராய்ந்து அது மிகத் தூய்மையான இஸ்லாமிய மார்க்கத்தில் தான் உள்ளது என்பதனை உணர்வுபூர்வமாக உணர்ந்து தாய் தந்தை சகோதரசகோதரிகள்,உற்றார் உறவினர்கள் எல்லாம் மறுமையில் (பரலோகத்தில்) எமக்கு உதவி செய்யமாட்டார்கள். 

மேலும் உதவவும் முடியாது என உணர்ந்து தான் உறவை எல்லாம் தூக்கி எறிந்து இஸ்லாம் தான் எம் உயிர் மூச்சு என நினைத்து இஸ்லாத்தை தழுவுகிறார்களே தவிர எதிரிகள் யூகிப்பதைப் போன்று அழியும ;பெண்ணுக்காகவோ,பணத்திற்காகவோ,பதவிக்காகவோ வரவில்லை என்பதுதான் நிதர்சண உண்மையாகும்.இதனால் தான் இன்று உலகிலே மக்களுக்கு மத்தியில் மிகவும் வேகமாக வளரும் மதங்களில் முதலாவது இடத்தில் வகிப்பது இஸ்லாமிய மார்க்கம் என்பது எல்லோரும் அறிந்த ஓர் அற்புத உண்மையாகும் இன்னும் இவ்உலகில் நாம் எதை  வேண்டுமானாலும் பணத்தால் சாதிக்கலாம். ஆனால் இஸ்லாம் எனும் ஓர் இறைக் கொள்கையை மட்டும் தான் யாராலும் வாங்கவும் முடியாது,யாருக்கும் நன்கொடையாக கையளிக்கவும் முடியாது. இது ஒரே இறைவனால் வழங்கப்படும் ஓர் ஈருலக வெற்றியாகும்.

அல்லாஹ் கூறுகிறான்(அல்லாஹ் விரும்புவோருக்கு மாத்திரம் தான் நேர் வழியாகும்) (திருக்குர்ஆன்) என் பாசத்துக்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! இஸ்லாத்தின் அழகிய வழிகாட்டல்களை நாளாந்தம் எமது வாழ்வில் கடைப்பிடிப்பதோடு மாற்று மத சகோதர சகோதரிகளுக்கும் வன்முறை இல்லாமல் மென்மையாய் முன்வைக்க முயற்சித்து மறுமையில் நாம் எல்லோரும் இறைவனின்; சுவனத்தை அடைய முயற்சி செய்வோமாக! எல்லாம் வல்ல இறைவன் எம்மை பொருந்திக் கொள்வானாக! அல்ஹம்துலில்லாஹ்.   

No comments

Powered by Blogger.