முஸ்லிம்கள் கொண்டாடிய சுதந்திர தினம், திசை மாறிச் சென்றதா..?
-அப்துல் ஹபீழ்-
கடந்த காலங்களை விட இந்த வருடம் சுதந்திர தினக் கொண்டாட்டம் வெகு விமரிசையாக முஸ்லிம்களால் கொண்டாடப்பட்டதைக் காண முடிந்தது. அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பாடசாலைகள், அலுவலகங்களில் சுருங்கிப் போய் இருந்த சுதந்திர தினக்கெண்டாட்டம் திடீரென பள்ளிவாயல்கள், அரபுக் கல்லூரிகள், ஜம்இய்யதுல் உலமா கிளைகள் அனைத்தையும் ஆக்கிரமித்துவிட்டன.
தேசத்தை வணங்கும் நமோ நமோ கீதம் முஸ்லிம்களின் பக்திப் பாடலாய் ஒலிக்கின்றது.
ஏன் இந்த மாற்றம்? இலங்கை வரலாற்றில் முன் சென்ற முஸ்லிம்களிடம் இல்லாத தேசபக்தி நம்மிடம் தலைக்கேறிவிட்டதா? இல்லை பெரும்பான்மை சமூகத்திலுள்ள சில இனவாதிகளின் பொய்ப்பிரச்சாரம் முஸ்லிம் சமூகத்தை நடுங்கச்செய்து விட்டதா? அல்லாஹ்வின் பூமியில் கிறிஸ்தவ காலனித்துவத்திலிருந்து விடுதலைபெற்று ஒரு பௌத்த தேசம் உருவானதையிட்டு முஸ்லிம்களுக்கு இவ்வளவு மகிழ்ச்சியா?
இல்லை இல்லை தேசப்பற்றை வெளிப்படுத்தவே நாம் இவ்வாறு செய்தோம் என்றால் ஒரு முஸ்லிம் தனது பிரதேசத்தின் மீதான பற்றை வெளிப்படுத்த ஒரு கொண்டாட்டத்தை ஏற்படுத்திக்கொள்ளும் வழிமுறையை இஸ்லாமிய வரலாற்றுப் பாரம்பரியம் நமக்கு வாழிகாட்டவில்லை என்பதை முதலில் நாம் புரிந்து கெள்ளவேண்டும். வருடம் ஒரு முறை மட்டும் தேசப்பற்றை வெளிப்படுத்துகின்றோம் என்ற பெயரில் அந்நியர்கள் உருவாக்கித்தந்த தேசிய தினத்தை நாம் ஏன் கொண்டாட வேண்டும்? எல்லாவற்றிலும் தனித்துவமான இறைவழிகாட்டலைப் பெற்ற நாம் மனித மாயைகளுக்கு ஏன் அடிபணியவேண்டும்?
இஸ்லாத்தின் தலைநகரான மக்காநகர் அல்லாஹ்வை மட்டும் வணங்கும் ஏகத்துவ தேசமாக எப்போது மாறும் என்ற ஏக்கத்திலிருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கா வெற்றியின் மூலம் இணைவைப்பிலிருந்து மக்காவை மீட்டு முஸ்லிம்களின் கையில் ஒப்படைத்தார்கள். மக்காவை அதிகம் நேசித்த அவர்கள் அந்த தேசப்பற்றை வெளிப்படுத்த மக்கா வெற்றிகொள்ளப்பட்ட தினத்தை மக்காவின் தேசிய தினமாக அறிமுகப்படுத்தவில்லை. ஒவ்வொரு முஸ்லிமும் தன்னைச் சுற்றி வாழும் மக்களுடன் எப்போதும் ஐக்கியத்துடனும், நல்லிணக்கத்துடனும் வாழவேண்டும். நீதியையும், நேர்மையையும் வாழ்வின் சகல மட்டங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும்.
அந்நிய பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்த தேசிய கீதம் பாடி அதனை கௌரவித்து தேச வணக்கம் புரியும் முஸ்லிம் தலைமைகள், நாளை தேசப்பற்றை வெளிப்படுத்த மாடறுப்புத்தடையை அங்கீகரித்து எஞ்சியுள்ள ஹலாலையும் விட்டுக்கொடுக்கத் தயாராகிவிடமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
This comment has been removed by the author.
ReplyDeleteAbsolutely correct
ReplyDeleteநியாயமாக சுட்டிக் காட்டக் கூடிய விடயம்.பள்ளி வாசல்களில் எல்லாம் சுதந்திர தின கீதம் எல்லாம் பாட வேண்டிய எத் தேவையும் கிடையாது.இலங்கையில் யாருக்கு சுதந்திரம் உண்டு.ஓரு பெண் எந்த அச்சமும் இன்றி நடு நிசியில் தனிமையில் செல்கின்றாளோ அன்று தான் உண்மையான சுதந்திரம்.
ReplyDeleteIf you say so, there's no independence anywhere in the world.
DeleteU ryt brother
ReplyDeleteYou are absolutely correct bro. In fact we were supposed to be like this year in the past. At least we have started from this year masha Allah
ReplyDeletemavlood and sirk doing in the masjith same sirk miyav
ReplyDeleteWhat a surprise educated people.comments and thinking way very nice.one lady will travel alone??its not a easy.we have to do lots of mujaahida
ReplyDeleteஇன்னும் புரியவில்லை எழுத முடியும் என்பதற்காக எல்லாவற்றையும் எழுதக் கூடாது
ReplyDeleteபன்முகப்படுத்தப்பட்ட சமூகத்தில் வாழ்கின்ற நாம் நமது தேசப்பற்றை வெளிப்படுத்துவது இன்றியமையாத ஒன்றாகும் முஸ்லிம்கள் நாட்டின் மீது பற்றுள்ளவர்கள் என்பதை மற்றவர்கள் அறிய வேண்டும் அதனூடாக மற்றவர்களின் உள்ளங்களை வெற்றி கொள்ள வேண்டும்
இவ்வாறான மனப்பாங்குடன் காலம் கடந்ததால்தான் சகோதர சமூகத்தினர் முஸ்லிம்கள் நாட்டைப் பிரிப்பவர்கள் நாட்டைக் கைப்பற்றுபவர்கள் என்று தவறான அபிப்பிராயம் கொள்ள நேரிட்டது
குறுகிய வட்டத்திற்குள் சிந்திப்பது தவறானது
மக்காவையும் இலங்கையையும் ஒப்பிடுவது முறையான ஒப்பீடு அல்ல அது இஸ்லாமியர்களின் பிரதேசம்
காலனித்துவத்தில் இருந்து விடுபடவில்லையானால் மிஷனரிகளால் இஸ்லாம் இன்று சூறையாடப்பட்டிருக்கும்
ஆயிரக்கணக்கான சிலைகள் கஃபாவை சூழ இருக்கும் போது
ReplyDeleteஅங்கு தொழுதவர் நபியவர்கள்.
ஏன் நிர்ப்பந்த சூழ்நிலைகளில் குப்ரான வார்தைகள் மொழியக் கூட நபியவர்கள் அனுமதி கொடுத்தார்கள்.
இப்படி உதாரணங்களை அடிக்கிக் கொண்டே போகலாம்
இவை சிறுபான்மை வாழ்வதற்கான நுணுக்கங்கள்
இவர் இங்கு குறிப்பிடுவது ஜஸ்ஜஸ் இன் அடிப்படை கொள்கைகளை
சூழ்நிலைகளை கவனியாது வெறுமனே வெற்றுக் கோஷங்களை வைத்து உணர்ச்சிவசப்பட்டு
நிகழ்வுகளை அணுகுவது.
இது மிகப் ஆபத்தானதொரு அணுகுமுறை
உடலாலும் உள்ளத்தாலும் சகிக்க முடியாத கொடுமையாலும், தாங்க முடியாத வேதனையாலும், தன் உடம்பில் உயிர் இருந்தால் இந்த தூய இஸ்லாத்தை இன்னும் பலருக்கு சென்று சேர்க்க வேண்டும் என்ற தூய எண்ணத்தினாலும்,
வேறு வழியே இல்லாமல் வாயளவில் லாத்து உஸ்ஸாவை வணங்குகிறேன் என்னை விடுங்கள் என்று சொல்லி அவர்களிடம் அன்றைய தினம் தப்பித்தார்கள் அம்மார்(ரலி) அவர்கள். இருப்பினும் அந்த கயவர் கூட்டம் “நாளை வருகிறோம்” என்று சொல்லிச் சென்றார்கள்.
நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள் அம்மார்(ரலி) அவர்கள். நபி(ஸல்) அவர்களிடம் நடந்த சம்பவத்தைச் சொல்லி அழுதார்கள் அம்மார்(ரலி) அவர்கள்.
அப்போது அம்மார்(ரலி) அவர்களின் கண்ணீரைத் துடைத்துவிட்டு அண்ணல் பெருமானார் நபி(ஸல்) அவர்கள்
“என்னுடைய அம்மாரே, லாத்து உஸ்ஸாவை வணங்குகிறேன் என்று நீங்கள் சொன்ன நேரத்தில் உங்களுடைய உள்ளத்தில் ஈமான் எப்படி இருந்தது” என்று கேட்டார்கள். அதற்கு அம்மார்(ரலி) அவர்கள் “ யா ரசூலுல்லாஹ் என்னுடைய உள்ளம் ஈமானால் நிரம்பி இருந்தது யா ரசூலுல்லாஹ், நான் அதை நாவால் தான் சொன்னேன் யா ரசூலுல்லாஹ்! என்னை நான் காப்பாற்ற, இஸ்லாத்திற்காக வேண்டி நான் உழைக்க வேண்டும் என்பதால் நான் வாயளவில் சொன்ன வாசகம் தான் அது யா ரசூலுல்லாஹ்” என்று சொன்னார்கள். அந்த சமயத்தில் தான் பின் வரும் வசனம் இறக்கப்பட்டது.
எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) – அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர – (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் குஃப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ – இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு. அல்குர்ஆன் (16:106)
இது சிறு பிள்ளைத்தனமான கட்டுரை
ReplyDeleteபல்லின சமூகத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்துவது அவசியம்
முஸ்லிம்கள் நாட்டைப்பிரிப்பவர்கள் அல்ல
நாட்டைக் காப்பவர்கள்
கடந்த காலங்களில் நாம் விட்ட தவறுதான் இன்று நாம் சந்திக்கின்ற பிரச்சினைகள்
மக்காவையும் இலங்கையையும் ஒப்பிடுவது பொருத்தமற்ற ஒப்பாக்கலாகும்
அபீசனியா நஜ்ஜாஷி மன்னருடன் நபியவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள்
தயு செய்து இவ்வாறான கட்டுரைகளை பதிவிட வேண்டாம்
Writer has a narrow view on Islam.
ReplyDeleteThis people can misguide us.
Yes I angry about this article
ReplyDeleteIndependence day is just a celebration of the countries independence. We get free education, medication, legal service and etc from our wonderful country and what's wrong in celebrating it. Even Muslim countries like Pakistan, Arab countries celebrate it. Why do you guys compare it with Islam. Islam did not say celebrate it. Also it did not say not to celebrate it as well.
ReplyDeleteThis article is not well to this time but just okay
ReplyDeleteதூற்றுவதற்கு ஒரு கூட்டம் போற்றுவதற்கு ஒரு கூட்டம் யார் எது சொன்னாலும் உலகில்மனிதன் மனிதனாக வாழப்பழகிக்கொள்ளாதவரை சுதந்திரம் அவர்களுக்கு மட்டுமல்ல அந்த நாட்டுக்கே பூச்சியம்தான் விலங்குகள் விலங்குகளை கேவலப்படுத்துவதில்லை மனிதனே மனிதனை கேவலப்படுத்துகின்றான் தும்புருத்துகின்றான்...
ReplyDeleteசம்பந்தமில்லாத கட்டுறை,எழுதியவர் குர்ஆன் ஹதீஸ் படுக்கரதவர் என்று நினைக்கிறேன்!
ReplyDeleteAs we are also Sri Lankans, we should be patriotic. Celebrating Independence Day is a must. This kind of stupid article shouldn't be published. Every writer should think wisely. We are not afraid of anyone. We showed our patriotism as Islam allowed. What's the purpose of this writer?
ReplyDeleteYou are absolutely correct.
ReplyDeleteReally, I agree with you
ReplyDeleteMost think start with good intention but unfortunately there changed in to different format and practice by the future generation. This is widely we can see in our Muslim society in the name of Islam. So I thing it is not healthy to our religion to introduce some thing not in Islam. Try to emulate our prophet in all ways in our life to mive forward our umma.
ReplyDeleteJazakallah
அப்துல் ஹபீல் அவர்களே, தேசிய கீதம் தேசத்தை வணங்கும் கீதம் அல்ல வாழ்த்தும் கீதம், ஆசீர்வதிக்கும் கீதம், எந்த முஸ்லிமும் இதை பக்தி கீதமாக இசைக்கவில்லை. ஒரு முஸ்லிம் தான் வாழும் நாட்டை நேசிப்பதில் எந்த தவறும் கிடையாது. இஸ்லாத்தின் சட்ட திட்டங்களுக்கு அமைய உங்களால், முஸ்லிம்கள் தேசிய தினம் கொண்டாட கூடாது என ஒரு பத்துவாவை கொடுக்க முடியுமா??
ReplyDeleteHave you ever been to school?
ReplyDeleteமத்ரஸாக்களில் மார்க்க அறிவு தவிர்ந்த ஏனையவை மறுக்கப்படுகின்ற போது, இப்படித்தான் நம் அறிஞர்கள் தம்மை மட்டுப்படுத்திக் கொள்வார்கள்.
ReplyDeleteNicely said
Deletefoolish article...janfna muslim should review the article before publishing not only reviewing the comments. there are more tallented commenting person here rather than the writers.
ReplyDeletethis shows lack of knowledge of writer
foolish article...janfna muslim should review the article before publishing not only reviewing the comments. there are more tallented commenting person here rather than the writers.
ReplyDeletethis shows lack of knowledge of writer
Really sad to see this kind of article.
ReplyDeleteJafna muslim why your publishing such kind of article.we believe in you that your belongs to muslims and not for munafiqs