Header Ads



கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன், இஹ்ஸானுடைய நேர்மை - 2 இலட்சம் உரியவரிடம் ஒப்படைப்பு (படங்கள்)


- THAMBIRAJAH SAHADEVARAJAJAH -

கடந்த சனிக்கிழமை கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசிய வாரத்தினையொட்டிய இறுதி நாள் நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது மைதானத்தில்  நடைபெற்றுக் கொண்டிருந்த போது மைதானத்தில் அனாதரவாக கிடந்த பொதியொன்றினை கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயிலும் எஸ்.எச். இஹ்ஸான் கண்டெடுத்துள்ளார்.

கண்டெடுத்து அதனை பிரித்து பார்த்த மாணவன் அப்பொதியினுள் பெரும் தொகை பணம் இருப்பதனை கண்டு எவரிடமும் கூறாமல் நேரடியாக மைதானத்தின் மேடையில் அமர்ந்திருந்த பிரதியமைச்சரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து இம்மாணவனின் நல்ல செயலை மேடையில் வைத்தே பாராட்டிய பிரதியமைச்சர் கல்முனை பொலிஸாரின் உதவியுடன் அப் பணத்தினை உரியவரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரி மாணவர்கள் ஒழுக்கத்தில் மிகவும் நேர்த்தியானவர்கள் இறைவனுக்கு பயந்தவர்கள் என்பதனை இம்மாணவனின் செயற்பாடு எமக்கு உணர்த்தியுள்ளதாக அங்கு சமூகமளித்திருந்த அனைவரும் தெரிவித்தனர்.

இம்மாணவனை பாராட்டி இன்று( 1 ) இடம்பெற்ற பகுதி வாரியான காலைக்கூட்டத்தில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் உள்ளிட்ட ஆசிரியர்கள் இம்மாணவனை வாழத்தியதுடன் பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.


No comments

Powered by Blogger.