இலங்கையில் அதிகரிக்கும் புற்றுநோய்
இலங்கையில் வருடந்தோறும் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதை அவதானிக்க முடிவதாக மகரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையின் சுகாதார சேவை அத்தியட்சர் வைத்தியர் மகிபால ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த வருடத்தில் மாத்திரம் சுமார் 25,000 இற்கு மேற்பட்ட புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவ்வருடத்தில் இதுவரைக்காலமும் 13,500 க்கு மேற்பட்டவர்களும் புற்றுநோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கைப் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் கருப்பை புற்றுநேய் தைரோட் புற்றுநோய்கள் காணப்படும் வேளை ஆண்களிடையே வாய்ப்புற்று நோய், குரல்வளைப் புற்றுநோய், சுவாசப் புற்றுநோய் பொதுவாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
(பா.ருத்ரகுமார்)

Post a Comment