Header Ads



சர்வதேச சமூக தினத்தை முன்னிட்டு, ஸ்ரீலங்கா இஸ்லாமிய இயக்கத்தினால் கலந்துரையாடல்

ஸ்ரீ லங்கா இஸ்லாமிய இயக்கம், சுரகிமு ஸ்ரீ லங்கா அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச சமூக நீதி தினம் (Social Justice Day) கலந்;துரையாடல்கள் இன்று 20.02.2016யில் கொழும்பு தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் சுரகிமு ஸ்ரீ லங்கா அமைப்பின் தலைவர் அஷ் ஷெய்க் ஆஸாத் ஸிறாஸ் (நளீமி)யின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வளவாளர்களாக சட்டத்தரணி றுஸ்தி ஹபீப் மற்றும் இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் அஷ் ஷெய்க் உஷைர் (இஸ்லாஹி) ஆகியோர் கலந்து கொண்டு முறையே ‘சமூக நீதி ஒரு சட்டப்பார்வை’ மற்றும் ‘இஸ்லாத்தில் சமூக நீதி’ ஆகிய தலைப்புகளில் விரிவுரை நிகழ்தினார்கள்.

சமூக நீதி கேட்பாடு வெறும் கோசமாக இல்லாமல் கொள்கை எனும் தளத்தை நோக்கி நகர்த்தப்பட வேண்டும் என்று தெரிவித்த உஸ்தாத் உஷைர் வரலாற்று ஓட்டத்தில் சமூக நீதியில் மாறுபட்ட பரிமாணங்களை சிறப்பாக விளக்கினார்.

விரிவுரைகளைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலினை ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் பொதுச் செயலாளர் சகோ றுடானி ஸாஹிர் நெறிப்படுத்தினார். இஸ்லாமிய சமூக நீதியை கேள்விக்குள்ளாக்கும் காரணிகள், வறுமை ஒழிப்பதற்கு ஷகாத் ஒரு தீர்வாகுமா? மற்றும் சமூக நீதியை பாதுகாக்க இலங்கையின் அரசியல் அமைப்பு கொண்டுள்ள சட்ட ஏற்பாடுகள் மிக விரிவான கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.