Header Ads



சுதந்திரத்திற்காக ஏங்கும் சிறுபான்மையினர்..!


இன்று 04/02/2016 இலங்கை பிரித்தானியாவின் அடக்குமுறை  ஆட்சியிலிருந்து விடுபட்டு சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் ஆகிவிட்டன .

சுதந்திரம் அடைந்த அன்று மக்கள் இன வேறுபாடின்றி மிகவும் சந்தோஷத்தில் மூழ்கி இருந்ததை நாம் வரலாற்றின் மூலம் அறிவோம் . ஆனால்  அதே சந்தோஷம் இன்று மக்கள் மத்தியில் இருக்கின்றதா என்று கேட்டால் பெரும்பாலானோர் இல்லை என்றே கூறுவர் ; ஏனெனில் நாட்டில் உள்ள ஒரு இனத்திற்கு மாத்திரம் தான்  சுதந்திரம் கிடைத்துள்ளது போல் அதிகமானோர் உணர்கின்ற அளவுக்கு இனத் துவேச செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில் தலை விரித்தாடுகின்றன .

எவ்வளவு தான் சிறுபான்மையினர் தமது நாட்டுப் பற்றை வெளிப்படுத்தினாலும் பெரும்பான்மை சமூகத்தினர் சிறுபான்மையினரை குற்ற நோக்கிலே கவனிப்பதை அவதானிக்க முடிகின்றது . இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்னின்று முழு மூச்சாக பாடுபட்டு அதற்காக வித்திட்டவர்களில் சிறுபான்மையினருக்கும் பங்குண்டு என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை .

விடுதலைப் புலிகளின் காலத்தில் வட கிழக்கு மக்கள் சுதந்திரம் இன்றி அதற்காக ஏங்கினர் இ அவ்வாறே சென்ற ஆட்சியிலும் சிறுபான்மையினர் மிகவும் அடக்கி ஒடுக்கப்பட்டு முடக்கப்பட்டு அநியாயம் செய்யப்பட்டனர் இ அப்பொழுதும் மக்களின் ஏக்கப் பார்வைகள் சுதந்திரத்தை நோக்கியே இருந்தன . இவ்வாறாக இலங்கை சிறுபான்மை மக்கள் சுதந்திரத்தை தொலைப்பதும் தேடுவதுமாகத் தான் வாழ்க்கையைக் கொண்டு செல்கின்றனர் .

அரசியலில் அமுக்கக் குழுக்கள் காணப்படுவது  போன்று  ஒரு சில அமுக்கக் குழுக்களால் இன்றும் சிறுபான்மை மக்கள் தமது மத இறைமையையும் உரிமைகளையும்  பெற முடியாத அளவு கஷ்டப்படும் சூழ் நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறெனில் இன்றும் சிறுபான்மையினர் சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றனரா ???

பெயரளவில் சுதந்திரம் என்று மட்டும் எல்லோரின் வாயாலும் கூறப்படுகின்றதே தவிர உள்ளளவில் சுதந்திரத்திற்காக ஏங்குவோரே அதிகம் எனலாம் . மக்கள் ஏங்கும் சுதந்திரம் மீண்டும் கிடைக்குமா ? அல்லது இலங்கையின் வரலாற்று நெடுகிலும் சிறுபான்மையினர் இவ்வாறு தான் ஏக்கத்துடனே அடக்குமுறைக்கு உட்பட்டு காலங்களைக் கழிப்பார்களா ?

என்றொரு  நாள் சிறுபான்மையினரும் முழுச் சுதந்திரக் காற்றை தமது அனைத்து தேசத்துக்கு முரணாகாத செயற்பாடுகளில் நுகர்வார்களோ அன்று தான் உண்மையான சுதந்திரம் இந் நாட்டில் மலரும் .

சுதந்திரத்தை நோக்கிய  ஏக்கத்துடன் ...

அஸ்ஹான் ஹனீபா
தற்போது மதீனா பல்கலைக்கழகத்தில் இருந்து..

No comments

Powered by Blogger.