Header Ads



இந்தச் சிறுவனுக்கு உதவுங்கள்..!

-Ashroff Shihabdeen-

இந்தப் படத்தில் உள்ள மூன்றரை வயதுச் சிறுவனான முகம்மத் அமீனுக்குச் செவிப்புலன் இல்லை. அதனால் பேசவும் முடியாது. தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான சிறுவர் பாடசாலையொன்றில் கற்றுக் கொண்டிருக்கிறான்.

வைத்தியப் பரிசோதனை அறிக்கையின் படி காதுகள் கேட்குமாக இருந்தால் பேச்சுத் தானாகவே வந்துவிடும் என்கிறது. கேள்விப் புலனைப் பெறும் இயந்திரம் பொருத்தப்பட்டால் வெற்றியளிக்கும் என்றும் சொல்கிறது.

அந்த இயந்திரத்தின் விலை 360,000 ருபாய்கள். அன்றாடம் காய்ச்சிகளான பெற்றோரால் இந்தத் தொகையைச் சேர்க்க முடியாதுள்ளது. எனவே இரக்கமுள்ள இதயத்தினரின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்காக வங்கிக் கணக்கு ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

காருண்யம் உள்ளவர்கள் இந்தச் சிறுவனின் எதிர்காலம் கருதி சிறிய தொகையாக இருந்தாலும் உரிய வங்கிக் கணக்கில் இடமுடியும். சிறு துளி பெருவெள்ளமாகும்.

இதைப் படித்ததும் பணம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் வரலாம். நாளை அதை மறந்து போகாமல் இருக்கக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இறைவன் நம்மூலம் அச்சிறுவனின் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க எண்ணியிருக்கிறான் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

“கொண்டு வந்தது எதுவுமில்லை! கொண்டு செல்லப்போவதும் எதுவுமில்லை!!”

கணக்கிலக்கம் - 046020281573 (HNB)

Mrs. M.R.F. Maimuna
46/11, Dhankanatha Road,
Mabola - Wattala

1 comment:

  1. Dear Jaffna Muslim, இந்த மாதிரி செய்திகளையாவது ,(Unicode copy)பிரதி செய்யும் வசதியை வையுங்கள்.பல பேருக்கு Sharing செய்யும் Idea இருந்தும் சிரமங்களுக்காக விட்டு விடுவார்கள் என்பது என் தாழ்மையான கருத்து..

    யா அல்லாஹ் இந்த சிறுவன் சுகம் பெற உதவி செய்வாக.இவரின் பெற்றோர்களின் கவலையை போக்கி, அவர்களுக்கும் றஹ்மத் செய்வாயாக... உதவும் உள்ளங்களின் குழந்தைகளையும் தீங்குகளை விட்டு பாதுகாப்பாயாக...

    நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். மேலும் அவன் உங்களை (எந்த சொத்துக்கு) பின்தோன்றல்களாக ஆக்கியுள்ளானோ அதிலிருந்து (அல்லாஹ்வுக்காக) செலவு செய்யுங்கள். ஏனெனில் உங்களில் எவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்வுக்காகச்) செலவும் (தானம்) செய்கிறார்களோ அவர்களுக்கு (அவனிடம்) பெரியதொரு கூலி இருக்கிறது. (57:7)


    யார் தங்கள் பொருள்களை (தான தர்மங்களில் )இரவிலும், பகலிலும் இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (2:274)


    அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: மறுமை நாளில் ஏழு பேருக்கு நிழலே இல்லாத மஹ்ஷர் மைதானத்தில் தன்னுடைய நிழலான (அர்ஷின் நிழலை) அளிக்கிறான். அதில் ஒரு நபர் அவருடைய வலக்கை அவர் தர்மம் செய்ததை இடக்கை அறிந்து கொள்ளவில்லை. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்

    அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மையுள்ள தர்மம் எது எனக் கோட்டார். நீர் ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும் வறுமைக்கு பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே நன்மை என்றார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)


    அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, (தர்மம் செய்யாது) கருமித்தனம் செய்பவர் மற்றும் தர்மம் செய்பவருக்கு உதாரணம் அவ்விருவரின் மீதும் இரும்பினால் ஆன கேடயம் (முழக்க அவ்விருவரையும் ழூடிக் கொண்டவாறு) உள்ளது. (அந்நிலையிலிருக்கும்) தர்மம் செய்து கொண்டிருந்தவர் ஒரு தர்மத்தை செய்ய நாடுவாரானால் அது அவருக்கு விஸ்தீரணமாகிக் கொடுக்கும். முடிவாக அவரிலிருந்து ஏற்பட்ட தவறுகளின் அடிச்சுவடுகளை அது அழித்து விடும். கருமித்தனத்தை உடையவர் ஒரு தர்மத்தை செய்ய நாடுவாரனால் (அவர் மீது இருக்கும்) கவசமானது அவரை நெருக்கும். அவருடைய இரு கைகளும் அவரது கழுத்தின்பால் இணைந்து கொள்ளும் (அதிலுள்ள) ஒவ்வொரு வளையமும் அவரை இருக்கிக் கொள்ளும். அதை அவர் விசாலமாக்கிக் கொள்ள அவர் பெரிதும் முயல்வார் ஆனால் அதற்கு சக்தி பெறமாட்டார். (ஆதாரம்: முஸ்லிம்)

    ReplyDelete

Powered by Blogger.