Header Ads



இலங்கையின் தேசியக்கொடி, எதை எமக்கு உணர்த்துகின்றது..?

-அஷ் ஷெய்க், அல் ஹாபிள் M Z M ஷபீக்-

அஸ்ஸலாமு அலைக்கும்
(04/02/2016) அன்று  இலங்கையிலும்  வேறு பல நாடுகளிலும் வசிக்கின்ற இலங்கையர்களால்  இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினம் நினைவு கூறப்பட்டது. பௌத்தர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள், ஏனைய இனத்தினர் என்ற எவ்வித பாகுபாடும் இன்றி அனைத்து மதத்தினரும் குறித்த  தினத்தை நினைவு கூர்ர்ந்து நாட்டின் தேசியக் கொடியையும் கம்பத்தில் பறக்க விட்டிருந்தனர். இஸ்லாத்தின் பார்வையில் சுதந்திர தினம் என்று ஒன்று  இருக்கின்றதா  ? இன்று நடைமுறையில் உள்ள சுதந்திர தின நினைவுகூறல்கள் இஸ்லாத்துக்கு  உற்பட்டனவா ? முஸ்லிம்கள் அவற்றில் பங்கு கொள்ளலாமா ?  என்றெல்லாம் சிலரால் வாதப் பிரதிவாதங்கள் முன் வைக்கப் பட்டு வருவதை நாம் அறிவோம்.

 எனினும் மாற்று மதத்தினரை பெரும்பான்மையினராக கொண்ட இலங்கை போன்ற நாடுகளில் இது  போன்ற  நினைவு கூறல்களை அவர்கள் பறந்து பட்ட அளவில் மேற்கொள்ளும் போது அதற்கு எதிராக முஸ்லிம்கள்  கண்டங்களை தெரிவிப்பதோ அல்லது அவற்றை முழுமையாக  புறக்கணித்து வாழ்வதோ அவை தேவையற்றவை என கோஷங்களை எழுப்புவதோ ஒரு சிறந்த இலக்கை நோக்கி பயணிக்கின்ற சமூகத்தின் சாணாக்கியம் மிக்க செயற்பாடாக இருக்க முடியாது.  அதற்காக அவற்றை தலையில் தூக்கி கொண்டாடிக் கொண்டிருக்க வேண்டும் என்பதல்ல. சமகால  களநிலவரங்களை கருத்திற் கொண்டு சிறிய அளவிலான பங்களிப்பை நாமும் செய்யலாம். அல்லது குறைந்த பற்சம் ஆதரவான நிலைப்பாட்டை வெளிப் படுத்தலாம்.

ஆக அந்த வகையில் இது போன்ற நினைவு கூறல்கள் எம் அனைவரது உள்ளத்திலும் மென்மேலும் நாட்டுப் பற்றை அதிகரிக்கச் செய்கின்றது. இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, சகிப்புத் தன்மை, நெருக்கம்  ஆகியன பெரும் கேள்விக் குறியாகி இருக்கின்ற இத் தருணத்தில் இது போன்ற சந்தர்ப்பங்களை முன்னிலைப் படுத்தி  எமக்குள் மென்மேலும் ஐக்கியத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கின்ற அதே வேலை நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் என்று தம்மை அடையாள படுத்திக் கொள்ளும் சிலர் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை பறக்க விடுவதை தடுக்கின்ற செயல்களிலும் மேலும் சில இனவாதக் குழுக்கள் பௌத்த மதத்தை மாத்திரம் பிரதிநிதித்துவப் படுத்தும் கொடியை பறக்க விடுவதிலும் ஆங்காங்கே இனவாதம் பேசுவதிலும் நேற்றைய சுதந்திர தினத்தின் போது அதிக ஈடுபாடு காட்டியுள்ளனர்.

அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற வகையிலேயே இலங்கை தேசியக் கொடி வடிவமைக்கப் பட்டிருக்கின்ற போதிலும்  பெரும்பான்மை இனத்தவர்களாக பௌத்தர்கள் இலங்கையில் வசிப்பதால் பௌத்த மத கொள்கையின் முக்கிய  கோற்பாடுகளை சற்று அதிகமாகவே தேசியக் கொடியில் பிரதிபலிக்கச் செய்திருப்பது ஞாயமானதே. தேசியக் கொடியில் பெரும்பான்மையினருக்கான கூடுதல் முக்கியத்துவம் போதுமான அளவு வழங்கப் பட்டிருக்கின்ற போதிலும் அதை கொண்டு கூட திருப்திப் பட்டுக் கொள்ளாமல் அல்லது சிறுபான்மையினரின்  மீதுள்ள காழ்ப்புணர்வின் காரணமாக இன்று தேசியக் கொடியை உதாசீனம் செய்து விட்டு பௌத்த கொடிகளை முதன்மைப் படுத்தி அரசியல் செய்ய முற்படுகின்ற, இனவாதத்தை வளர்க்க துடிக்கின்ற சில தலைமைகளையும் குறித்த சில பிக்குகளின் குழுக்களையும் கண்ணுறும் போது பெரும் மனவேதனையை தருகின்றது.

இதில் புதுமையும் ஆச்சர்யமும் என்னவெனில் இனவாதக் குழுக்கள் இன்று  தேசிய கொடியை நிராகரித்து, சுருக்கி எதை தனியான பௌத்த கொடியென அடையாள படுத்துகின்றனவோ அக் கொடிக்குள்ளே தான் மனிதனிடம் இருக்க வேண்டிய உயரிய நற்பண்புகளாக தேசிய கொடி மூலம் சுட்டிக் காட்டப் படுகின்ற அடையாளங்கள் காணப் படுகின்றன. இறக்கம், நற்பு , அன்பு,  கருணை, நேசம், சகிப்புத் தன்மை,வார்த்தை தூய்மை, தூய எண்ணம், நேரான பார்வை,  சமய ஞானத்தையும் தியானத்தையும் கடை பிடித்தல், நேர்மையான பேச்சு, மன ஒருமைப் பாடு, தூரநோக்கு, உயர்பண்பு " போன்ற சிறப்பான பல பண்புகள் கொண்டு தேசியக் கொடி அடையாள படுத்தப் படுவதாக சுற்றிக் காட்டப் பட்டுள்ளது.

எனினும் குறித்த இனவாதக் குழுக்கள் பொது இடங்களிலும், அரச அலுவலகங்களுக்குளும், பொதுப் பாதைகளிலும்  ஏன் நீதிமன்ற வளாகத்துக்குள்ளும் நடந்து கொள்கின்ற மிகவும் கீழ்த்தரமான நடவடிக்கைகளை காணும் போது பௌத்த மத நற்குணங்களை மக்களுக்கு போதிக்க வேண்டிய குறித்த  சமயத் தலைமைகள் பௌத்த மதம் போதிக்கின்ற உயரிய பண்புகளை விட்டும் எந்தளவு விலகிப் போயிருக்கின்றன என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். (அதேவேளை குறித்த சில இனவாதக் குழுக்களே மேற்சொன்ன அசிங்கங்களை செய்து வருகின்றார்களே தவிர ஏனைய பெரும்பான்மையான பௌத்த பிக்குகள் உயரிய பண்புகளுடன் சமாதானத்தையும் சகவாழ்வையுமே போதித்து வருகின்றார்கள்  என்பதை நான் அறிவோம்)

இலங்கையிலும் உலகெங்கிலும் இலங்கையர்களால் நாட்டின் சுதந்திர தினம் நினைவு கூறப் படுகின்ற இத் தருணத்தில் எமது தேசிய கொடியில் உள்ள ஒவ்வொரு அடையாளங்களும் எவற்றை  பிரதிபலிக்கின்றன என்பதை நாமும் அறிந்து எமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுப்போம்.கீழே தரப் பட்டுள்ள இணைப்பை பார்வையிட்ட பின் கட்டுரையை தொடர்வது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகின்றேன்.

https://youtu.be/TsnXapGlBBg

* மஞ்சள் நிற சிங்கம் : 70% சிங்கள பெரும்பான்மையினரை பிரதிபலிக்கின்றது                                                                 

* ஆரஞ்சு நிற ( Orange Colour ) பட்டை (கோடு) : சிறுபான்மை தமிழ் இனத்தை பிரதிபலிக்கின்றது                   

* பச்சை நிற பட்டை (கோடு) : சிறுபான்மை இஸ்லாமிய இனத்தை பிரதிபலிக்கின்றது

* கொடியை சுற்றியுள்ள மஞ்சள் நிற கரை : ஏனைய சிறுபான்மை  இனங்களை பிரதிபலிக்கின்றது

* நான்கு மூலைகளிலும் உள்ள அரச இலைகள் : பெளத்த மதத்தின் அன்பை பிரதிபலிக்கும்     04 பண்புகளை பிரதிபலிக்கின்றன

    (01) அன்பு   (02) கருணை (03) நேசம்  (04) சகிப்பு

 * சிங்கத்தின் வால் : பௌத்த மதத்தின் புனித என் மடங்கு பாதையை பிரதிபலிக்கின்றது
(1) நேரான பார்வை    (2) தூய எண்ணம் (3) நேர்மையான பேச்சு (4) நேர்மையான செயல்,   (5) நேர்மையான வாழ்வாதாரம்  (6) தூய உழைப்பு (7) நேர்தியான அவதானம்  (8) நேர்மையான மன ஒருமைப் பாடு

* சிங்கத்தின் சுருட்டை முடி : சமய அனுஷ்டானம், ஞானம், தியானம் ஆகியவற்றை கடை பிடிப்பதை பிரதிபலிக்கின்றது

*  தேசிய கொடியின் பழுப்பு சிவப்பு நிறம் ( Maroon Colour ) :  ஏனைய சிறுபான்மை இனங்களை பிரதிபலிக்கின்றது

*  சிங்கத்தின் ( முன்னம் கால் தாங்கிப் படித்திருக்கும்) வாள் :    இலங்கையின் இறையாண்மையை பிரதிபலிக்கின்றது

*  வாளின் கைப்பிடி : தண்ணீர், நெருப்பு, காற்று, மண் ஆகியவற்றின் மூலக் கூறுகளின் வலிமையை பறைசாட்டுகின்றது

* சிங்கத்தின் தாடி :  வார்த்தயில் தூய்மையை பிரதிபலிக்கின்றது

* சிங்கத்தின் மூக்கு :   புத்திக் கூர்மையை பிரதிபலிக்கின்றது

* சிங்கத்தின் கண்கள் :  நாட்டிற்கான  விழிப்புணர்வையும் தூரநோக்கையையும்  பிரதிபலிக்கின்றது

* தலை முன்னோக்கி  சீவப் பட்டுள்ள சிங்கத்தின் முடி : வீரத்தை பிரதிபலிக்கின்றது

* சிங்கத்தின் பிடரி மயிர் வரிகள் :   பிரபுத்துவத்தை பிரதிபலிக்கின்றது

*சிங்கத்தின் தலைக்கும் வாளுக்கும் இடையே உள்ள உயரத்தின் சமத்துவம் :  ஆட்சியாளர்களுக்கும் ஆளப் படுபவர்களுக்கும் இடையே உள்ள சமத்துவத்தை  பிரதிபலிக்கின்றது

* சிங்கத்தின் இரு முன் பாதங்களும் : செல்வத்தை  கையாள்வதின் தூய்மையை பிரதிபலிக்கின்றது.

மேலே கொடுக்கப் பட்டுள்ள இணைப்பில் ( Link இல்) உள்ள ஆங்கில வாசகங்களின் மொழிபெயர்ப்பை முடியுமான அளவு நெருக்கமான தமிழ்  வார்த்தைகளை கொண்டு மொழிபெயர்ப்பு செய்துள்ளேன். மேலும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருப்பின்  சகோதர சகோதரிகள் தமது அபிப்பிராயங்கள் முன் வைக்கலாம். ஜசாக்குமுள்ளாஹ்.

எமது தேசிய கொடியினூடாக சொல்லப் படுகின்ற தத்துவங்களை எமது அரசியல் தலைமைகளாலும் குடிமக்களாலும் ஒரு தசாப்த காலாம் மட்டுமாவது கடைப்பிடித்து பயணிக்க முடியுமாயின் முதலாம் உலக நாடுகளின் பட்டியலுக்குள் எமது இலங்கையும்  இடம் பிடித்து விடும் என்பதை உறுதியாக கூறிக் கொள்ளலாம்.

1 comment:

  1. அருமையான கருத்துக்கள்.

    ReplyDelete

Powered by Blogger.