Header Ads



"ஞானசாரருக்கு பாரிய சிக்கல்"

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரருக்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் ஒன்றியம் வழக்குத்தொடர உள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத்தொடரப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றை அவமரியாதை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொதுபல சேனா இயக்கம் மிகவும் மோசமான முறையில் ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் நடந்துகொண்டதாக ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதற்கு முன்னரும் பல தடவைகளில் ஞானசார தேரர் நீதிமன்றை அவமரியாதை செய்யும் வகையில் நடந்து கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

காவி உடையில் ரவுடிகளைப் போன்று நடந்துகொள்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இவ்வாறான நடவடிக்கைளை தடுக்கும்நோக்கில் வழக்குத் தொடரப்பட உள்ளதாகவும் சட்டத்தரணிகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.