சிரியாவில் மருத்துவமுகாம், பள்ளிகள் மீது தாக்குதல் - மாறிமாறி பழிபோடும் அமெரிக்கா, ரஷ்யா
சிரியாவில் வடக்கு பகுதியில் உள்ள 5 மருத்துவ முகாம்கள் மற்றும் இரண்டு பள்ளிகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.
வடக்கு பகுதியில் உள்ள அலெப்போ மற்றும் இட்லிப் பகுதியில் உள்ள 5 மருத்துவ முகாம்கள் மற்றும் இரண்டு பள்ளிகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட சுமார் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஐ.நா பொதுச் செயலாளர் பான்-கி-மூன், இந்த தாக்குதல் அப்பட்டமான சர்வதேச விதிமுறைகளை மீறிய செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு ரஷ்ய விமானப் படைகள்தான் காரணம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டிய நிலையில், அதனை மறுத்த ரஷ்யா பழியை அமெரிக்கா மீது பழியை திருப்பிப் போடுகிறது.
ரஷ்ய அரசின் ஊடக தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ரஷ்யாவுக்கான சிரியா நாட்டின் தூதர் ரியாட் ஹட்டாட், ‘அலெப்போ மற்றும் இட்லிப் நகர மருத்துவமனைகளின் மீது அமெரிக்க போர் விமானங்கள்தான் தாக்குதல் நடத்தின என்றும் அந்த சம்பவத்துக்கும் ரஷ்யாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், சிரியா விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே ரஷ்யா மீது பழிபோட்டு அமெரிக்கா நடத்திவரும் பிரச்சாரப் போரின் ஒருகட்டமாகவே இந்த குற்றச்சாட்டையும் நாங்கள் பார்க்க வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.
Post a Comment