Header Ads



எனது ஆட்சியில் முஸ்லிம்களுக்கு, இடம்பெற்ற அநீதிகளுக்கு நான் பொறுப்பில்லை - மஹிந்த

(எம்.ஆர்.எம்.வஸீம்)

நான் இனவாதியல்ல. என்னை முஸ்லிம்களிடமிருந்து தூரப்படுத்துவதற்கு சதித்திட்டங்கள் இடம்பெறுகின்றன. இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.

எனது ஆட்சியில் முஸ்லிம்களுக்கு இடம்பெற்ற அநீதிகளுக்கு நான் பொறுப்பில்லை. என்னுடைய ஆட்சியில் முஸ்லிம்களுக்கு இடம் பெற்றதாக கூறப்படும் அநீதிகள் என்னை மீறி நடைபெற்றவையாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.  

முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ்வுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில்   வெள்ளிக்கிழமை இரவு  மல்வானை உலஹிட்டிவலயில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.  

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

என்மீது இனவாத முத்திரை குத்தி எனக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நிலவிய நல்லுறவை சீர்குலைக்க சதித்திட்டங்கள் இடம்பெறுகின்றன. இதற்கு சர்வதேசமும் உதவியுள்ளது. முஸ்லிம்களுடன் நான் ஆரம்பகாலம் முதல் நல்லுறவை பேணிவந்துள்ளேன். 

சர்வதேசம் என்னை முஸ்லிம்களிடமிருந்து பிரிப்பதற்கு முன்பு எனக்கும் முஸ்லிம்களுக்கு இடையில் பலமான உறவுப் பாலம் அமைந்திருந்தது. எனது ஆட்சிக் காலத்திலேயே முஸ்லிம்களுக்கு பலமான அரசியல் அங்கீகாரம் வழங்கப்பட்டது. முஸ்லிம்கள் பலர் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாகவும் நியமனம் பெற்றார்கள். என்றாலும் சர்வதேசம் நான் முஸ்லிம்களுக்கு எதிரானவன் என இனவாத முத்திரை குத்தி தனது காரியத்தைச் சாதித்துக் கொண்டது.

என்னிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி சர்வதேசத்துக்கு சார்பான ஆட்சியாளர்களிடம் அதனைக் கையளிப்பதற்கு சர்வதேசம் வகுத்த திட்டமே இதுவாகும். இந்த சதித்திட்டத்தில் சர்வதேசம் வெற்றி பெற்றுக் கொண்டது.

9 comments:

  1. நீ யோக்கியன், ரெம்ப நல்லவன் என்றதெல்லாம் எங்களுக்கு நல்லா தெரியும். ஆனா இவ்வளவுக்கு பிறகும் உன்ட சூ............ நக்குர சோனிமார் இருக்கிரானுவளே அவனுகளுக்கு மாறுகை மாறுகால் வாங்கி தெரு தெருவா பிச்ச எடுக்க விடனும்.

    ReplyDelete
  2. முஸ்லிம்கள் முட்டாள்கள் இல்லை. ஒரு குழியில் இரண்டு தடவை முஸ்லிம்கள் விழ மாட்டார்கள். போய்யா..........

    ReplyDelete
  3. உன் ஆட்சியில் நடந்தவைகள் உனக்கு தெரியாவிட்டால் நீ ஜனாதபதிக்கே தகுதி இல்லை. உன்வேசம் கலைந்துவிட்டது மீண்டும் புது வேசமா ராஸா

    ReplyDelete
  4. We have been taken a ride by US,India,Tamil diaspora and western allies. most of the Bodu balasena propaganda programs been aired by TNL(belong to Ranil's brother Shan Wickramasinghe).unfortunately our leaders too sold there souls to dollars.we Muslims should have more gratitude to Sinhalese brothers as they have given us lot.truth will prevail.

    ReplyDelete
  5. Mahinda Sir , Ummai thoatkadiththavargalum Muslimgal illai
    Sir ! Engalukku izu patri ezuvume theriyazu Sir ! Ellamey
    antha SUMANADASA velai ! Avanathaan nalla semaththiyaa
    vaanganum !

    ReplyDelete
  6. Enna aniyaayam Sir izu , Fonsekavayum neenga thookkaveyilla !
    Unga thambiyum onnum pannala ! Summa thevayillama veena unga
    mella paliya sumaththuranunga ! Anthap panamellam enga
    vachchirukkeenga Sir ? Saami saththiyama yaarukittayum vaaya
    thirakka maatam Sir !

    ReplyDelete
  7. ஆ என்ன சொன்னார் சரியாக் கேகல்லிங்க????????????????????????????????

    ReplyDelete

Powered by Blogger.