Header Ads



ஊடகங்களை அச்சுறுத்தும் ரணில், சீறுகிறது சுதந்திர ஊடக அமைப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கலாசார விழாவில் ஒபேரா தாளத்திற்கு தன்னோ புதுன்கே என்ற சிங்கள பாடலை பாடிய பாடகியை தெரண தொலைக்காட்சியின் அறிவிப்பாளர் ஒருவர் பெண் நாய் போல் என வர்ணித்திருந்தார்.

இதனை கண்டித்து பிரதமர் வெளியிட்ட கருத்துக்கள் சம்பந்தமாக கவலை வெளியிடுவதாக சுதந்திர ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒரு ஊடகத்தை இலக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலத்திரனியல் ஊடக நிறுவனத்தை அச்சுறுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளதாக சுதந்திர ஊடக அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

பிரதமரின் கருத்துக்களை அடுத்து சம்பந்தப்பட்ட ஊடவியலாளரான சங்கா அமரஜித் பணி நீக்கம் செய்யப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்துவதுடன் இதனை சிறிய விடயமாக கருத முடியாது.

குறித்த தொலைக்காட்சியின் அறிவிப்பாளரின் கருத்தை சுதந்திர ஊடக அமைப்பு அனுமதிக்கவில்லை என்ற போதிலும் ஊடக தரத்தை உயர்த்தும் விடயத்தில் பிரதமர் தலையிடக் கூடாது. ஊடக சமூகமே அதில் தலையிட வேண்டும்.

ஒரு தொலைக்காட்சியையோ, பத்திரிகையையோ இலக்கு வைத்து விமர்சிக்காது, அச்சுறுத்தாது, ஊடக பிரதானிகளை அழைத்து பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

பெண்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டமை தொடர்பில் தேடிப்பார்க்க போவதாக எச்சரிக்கை விடுத்ததானது, ஊடக நிறுவனங்கள் சுயதணிக்கை செய்வதற்கு கொடுக்கப்பட்ட அழுத்தமாக கருத முடியும்.

இவ்வாறான சம்பவங்கள் மூலம் கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் தேசிய பாதுகாப்பு, பயங்கரவாதம் என்ற போர்வையில் கடும் ஊடக அடக்குமுறையை மேற்கொண்டது போல்,புதிய அரசாங்கமும் உரிமைகள் என்ற போர்வையில் ஊடக அடக்குமுறையை மேற்கொள்ள முயற்சிக்கின்றது என்று குற்றச்சாட்டை எதிர்நோக்கலாம்.

இலத்திரனியல் ஊடகங்களை வழிநடத்த சுயாதீன வழிநடத்தல் முறையை ஊடக சமூகத்திற்கு உருவாகாமை ஒரு குறைப்பாடு எனவும் சுதந்திர ஊடக அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

1 comment:

  1. இவ்வளவு நாளா நீங்க எங்க இருந்தீங்க ராசா.........

    ReplyDelete

Powered by Blogger.