Header Ads



மகிந்த + கோத்தபாய பங்கேற்ற நிகழ்வில், கலந்துகொண்ட நாய் (படங்கள்)


படையினரை போர்க்குற்ற நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்வதை எதிர்த்து மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினர் பொதுமக்களிடம் கையொப்பம் திரட்டும் நடவடிக்கைகளை இன்று ஆரம்பித்து வைத்துள்ளனர்.

கொழும்பு கோட்டையில் உள்ள விகாரை ஒன்றில் நடந்த இந்த ஆரம்ப விழாவில் அண்ணனும், தம்பியும் முதல் கையெழுத்து இட்டிருந்தனர்.

தொடர்ந்து மகிந்த ஆதரவு அணியினரும், கூட்டு எதிர்க்கட்சியினரும் கையெழுத்திட்டார்கள்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் ஆழ்ந்த யோசனையில் இருந்த வேளை ஒரு கறுப்பு நாய் அவர்களுக்கு ஆதரவை தெரிவித்து தானும் கையெழுத்து இட வந்தது போல அங்கு பிரவேசித்தது.

இதனை அவதானித்தவர்கள் மகிந்தவிற்கும், கோத்தபாயவிற்கும் ஆதரவு தெரிவிக்க நாய் வந்துவிட்டது என நகைச்சுவையாக பேசிக்கொண்டனர்.

இதேவேளை இந்தச் சம்பவத்தினை சிங்கள ஊடகங்கள் இரு மாறுபட்ட கருத்துக்களோடு நோக்குகின்றன.  குறிப்பாக இந்த விடையம் நகைச்சுவையாக எழுதும் ஒரு தரப்பும், இதனை முக்கியமான செய்தியாக இன்னொரு தரப்பும் வெளிப்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


7 comments:

  1. நன்றியுள்ள மிருகம்

    ReplyDelete
  2. இனம் இனத்தோடத்தான் சேரும்

    ReplyDelete
  3. இரத்தக் கரைபடிந்த இடத்தை மோப்பமிட்டு FCID யிடம் முறையிடவே நாயின் திடீர் விஜயம்.மாறாக இவர்கள் போட்ட சோற்றுக்கு வாலாட்டவல்ல.

    ReplyDelete
  4. நாய் கூட்டம்

    ReplyDelete
  5. Birds of same feather flock together

    ReplyDelete
  6. தற்செயல் ஆனால் நற்செயலல்ல!

    ReplyDelete
  7. வந்தது சொறி நாய்.

    ReplyDelete

Powered by Blogger.