ஈரான் நாட்டில் கிராமமொன்றில், ஆண்கள் அனைவருக்கும் தூக்கு தண்டனை
ஈரான் நாட்டில் அமைந்துள்ள சிஸ்டானில் உள்ள கிராமமொன்றில் உள்ள ஆண்கள் அனைவருக்கும் போதை பொருள் கடத்தியதாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெயர் குறிப்பிடப்படாத அக்கிராமம் தொடர்பில் ஈரானிய அமைச்சரொருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமைகள் குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
வளர்ச்சி திட்டங்கள் எதையுமே முன்னெடுக்காத அரசால் பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை சீர்செய்ய முடியவில்லை, இதனால் வாழ்வாதாரம் தேடிய மக்கள் அதிக வருவாய் ஈட்டும் நோக்கில் போதை மருந்து கடத்தலில் ஈடுபடுகின்றனர். என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.
மரண தண்டனை வழங்குவதால் போதை மருந்து கடத்தல் ஒருபோதும் குறைந்துவிடவில்லை ஆனாலும் அரசு இதுபோன்ற குற்றங்களுக்கு தூக்கு தண்டனையை விதித்து வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த கிராமத்தில் உள்ள பிள்ளைகளும் போதைப் பொருள் கடத்தலை தொழிலாக தேர்ந்தெடுக்கக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment