யாழ்ப்பாண முஸ்லிம்களுடன், அமீர் அலி சந்திப்பு - மீள்குடியேற்றம் பற்றி ஆராய்வு
கடந்த யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த யாழ் மாவட்ட சாவகச்சேரி முஸ்லிம் பிரமுகர்களை கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி இன்று சந்தித்தார். சாவகச்சேரி பள்ளிவாசலில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் அவர்களின் மீள்குடியேற்றம் பற்றிய பல்வேறுபட்ட விடயங்கள் ஆலோசிக்கப்பட்டது.
இந்தக்கலந்துரையாடலில் யாழ் மாவட்ட அ.இ.ம.கா இன் அமைப்பாளர் அமீன் ஹாஜியார்,கிளி மாவட்ட சம்மேளனத்தலைவர் ஜமால்தீன் ஹாஜியார், யாழ் பணிமனை தலைவரும், யாழ் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான சுபியான் மெளலவி, யாழ் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் சரபுல் அனாம்,சகோதரர் ரொக்கீஸ்,சுனீஸ்,தையூப்,நிலாம், சாவகச்சேரி ஹனீபா ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
Post a Comment