முஸ்லிம்களுக்கான தனி அலகு என்றால், தமிழருக்கும் தனி அலகு வேண்டுமாம்...!!
இன்றைய தென்னிலங்கையின் பதட்டங்களை கருத்தில் கொண்டு, வடக்கு – கிழக்கு இணைப்பு தற்போது சாத்தியமில்லை என்று அரசாங்கம் கருதினால், கிழக்கில் பூர்வீகமாக வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் (மதத்தால் இந்துக்களும் கிறிஸ்தவர்களும்) தங்களது அரசியல் பொருளாதார விவகாரங்களை தனித்துவமாக கையாளும் வகையிலான தனியான நிர்வாக அலகு அவசியம் என்பதை நாங்கள் பரிந்துரை செய்கிறோம்.
புதிய அரசியலமைப்பில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த, ஒரு தனி அலகு என்னும் அடிப்படையில் ‘சமஷ்டி’ கட்டமைப்பின் கீழ் அதிகாரப் பகிர்வு இடம்பெற வேண்டும் என்று, சமூக அபிவிருத்தி ஆய்வு நிறுவனம், யோசனை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. நிறுவனத்தின் சார்பில், அரசியல் ஆய்வாளர் ஆ.யதீந்திரா யோசனையைச் சமர்ப்பித்திருந்தார்.
புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளைப் பெற்று வரும் குழுவின் அமர்வு திருகோணமலையில் இடம்பெற்ற போது, சமூக அபிவிருத்தி ஆய்வு நிறுவனத்தின் சார்பில், அரசியல் ஆய்வாளர் ஆ. யதீந்திரா யோசனையைச் சமர்ப்பித்திருந்தார். கிழக்கின் தமிழ் பகுதிகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் வகையில் அந்த நிர்வாக அலகு அமைய முடியும். வடக்கு கிழக்கை இணைத்தால் முஸ்லிம்களுக்கான தனியானதோர் அலகு தொடர்பில் சிந்திக்க முடியும் என்றால், அது இணைக்கப்படாது விட்டால் கிழக்கு வாழ் தமிழர்களின் அச்சத்தை போக்கும் வகையில் அவர்களுக்கான ஒரு தனியானதொரு நிர்வாக அலகு தொடர்பில் ஏன் சிந்திக்க முடியாது? இவ்வாறானதொரு கோரிக்கையை கடந்த கால அனுபவங்களிலிருந்தும் நியாயமான அச்சங்களிலிருந்துமே முன்வைக்கப்படுகிறது.
கிழக்கில் தமிழ் மக்கள் ஒரே நேரத்தில் இரண்டு சமூகங்களை எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றனர். இந்த இரண்டு சமூகங்களில் ஏதோ ஒன்றுடன் இணைவதால் மட்டுமே அவர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படப் போகிறது. ஓர் இனத்தைச் சார்ந்து இன்னொரு சமூகத்தின் சமூக பொருளதார வாழ்வு இருக்க முடியாது. இரண்டும் தனித்துவங்களோடும் சம அதிகாரத்தோடும் இணைந்து பணியாற்றுவது என்பது வேறு ஆனால் தனித்துவத்தை கைவிட்டு செயலாற்றுவது என்பது வேறு.
எனவே கிழக்கின் யதார்த்தத்தை கருத்தில் கொண்டு தமிழ் மக்களுக்கான தனியான ஒரு நிர்வாக அலகு அவசியம் என்பதை நாங்கள் இங்கு அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகின்றோம். இதன் மூலம்தான் கிழக்கு தமிழ் மக்களின் அச்சத்தை போக்க முடியும். கிழக்கு தமிழ் மக்களின் நியாயமான அச்சத்தை போக்கும் வகையிலான ஏற்பாடுகளை புதிய அரசியல் யாப்பு உள்ளடக்கவில்லையாயின் அது நல்லிணக்கம் நோக்கிய பயணத்தில் ஒரு பின்னடைவாகவே அமைய முடியும்.
யதீந்திராவின் வாதம் யதார்த்தமானதே.
ReplyDeleteமத்திய அரசில் வலுவாக இருக்கின்ற நிலையிலும் கூட பெரும்பான்மை இனத்தவர்கள் இணைக்கப்படும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமையும் தமிழர் பெரும்பான்மையைக் கண்டு அச்சமுறுகின்றார்கள் என்றால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள், ஏனைய இரு சமூகங்களின் இணைவை உத்தேசித்து அச்சமுறுவதும் நியாயமானதுதான்.
தவிர, விரும்பியோ விரும்பாமலோ சில தசாப்தங்கள் தமிழர்களை ஏகபோகமாக பிரதிநிதித்துவம் செய்துவிட்டு ஒழிந்துபோன விடுதலை விலங்குகள் ஏனைய இனங்கள் மீது முன்னம் புரிந்த அடக்குமுறை அட்டூழியங்களுக்காக தாம் பழிவாங்கப்படுவோமோ எனும் அச்சமும் யதீந்திரா போன்றவர்களின் மனக்கிலேசத்திற்கு காரணமாக இருக்கலாம்.
யதீந்திரா ( அரசியல் ஆய்வாளர்...???) அவர்களே, முஸ்லிம்களின் தனி அலகு கோரிக்கை வடக்கு கிழக்கு இணைந்தால் தானே தவிர, முஸ்லிம்கள் விரும்பி கேட்கும் ஒரு விடயம் அல்ல. தமிழ் மக்களின் நீண்ட கால போராட்டத்தை மதித்து ஒரு உடன்பாட்டுக்கு வர வேண்டும் என்பதற்காக வைக்கப்பட்ட தீர்வே என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
ReplyDeleteவடக்கும் கிழக்கும் பிரிந்து இருப்பதே கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு மிகவும் சிறந்தது என்பதை, பொருளாதாரம், அரசியல் அதிகாரம், மேல் தட்டு கீழ்தட்டு, கடந்த கால அனுபவம் போன்ற இன்னோரன்னே விடயங்களை கருத்தில் கொண்டே சொல்லுகிறோம். இதற்கு மிகவும் ஆதாரமாக ஆயுத போராட்ட காலத்தில் கருணா புலிகளில் இருந்து பிரிவதற்கு முன்பு உயிர் தியாகம் செய்த தமிழ் போராளிகளின் எண்ணிக்கை சான்று பகரும் என்பதை சுட்டி காட்ட விரும்புகிறோம்.
இதே விடயம் முஸ்லிம் மக்களுக்கும் பொருந்தும். முஸ்லிம் தனி அலகை விட, கிழக்கு மாகாணம் தனித்து இருப்பதே முஸ்லிம் மக்களுக்கு சிறந்தது என்பதை சுட்டி காட்ட விரும்புகிறோம். தென்கிழக்கு அலகு ( கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் தொகுதிகள் ) என்று கூறும் பிரதேசம் கல்முனை மாவட்டம் என்ற பெயரில் தமிழர் விடுதலை கூட்டனி (அண்ணன் அமிர்தலிங்கம் தலைமையில்) 1980 களில் முஸ்லிம்களுக்கு தருவதாக ஒரு தீர்வு முன் வைக்கப்பட்டது. அது அப்துல் அசீஸ் ( Ceylon Workers Congress) தலைமையில் கூடிய முஸ்லிம்களால் ( மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களும் இதில் பங்குபற்றினார் ) ஏக மனதாக நிராகரிக்கப்பட்டு கிழக்கு மாகாணம் தனியாக இருப்பது தான் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களுக்கு சிறந்தது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதை சுட்டி காட்ட விரும்புகிறோம்.
முஸ்லிம் மக்களிடம் அரசியல் பிரபள்ளியம் அடைவதற்காக முஸ்லிம் தனி அலகு பற்றி பேசும் ஒரு சிலர் ( பசீர் சேகு தாவுத் போன்றவர்கள் ) சரியான புள்ளிவிபரங்களுடன் நல்லது கெட்டதை பகுத்தறிந்து தமது பக்க நியாயத்தை முன்வைக்க வேண்டும் என்பதை பணிவுடன் சுட்டி காட்ட விரும்புகிறோம். தலைவர் அஸ்ரப் அவர்கள் கூறினார்கள் என்று கூறிக்கொண்டு அரசியல் வியாபாரம் செய்ய முற்படுபவர்களையும் குழப்ப சூழ்னிலையை ஏற்படுத்துபவர்களையும் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம்.
Unkalukku.kilakkil.alaku.vendumentral.enkalukkum.vendum.
ReplyDelete